Thursday, September 6, 2012
Sunday, January 15, 2012
புல்ம்பெயர் தமிழர்களே உங்கள் இருப்பு எந்தவகை.
புலம்பெயர்ந்த தமிழர்களே உங்கள் இருப்பு எவ்வகை ?
தமிழர்களே புலம் பெயர்ந்து உழைத்து அடைந்த நாட்டின் உயர்வுக்கு உழைத்து
வாழ்ந்துள்ளீர்கள். ஆனால் அத்துடன் உங்கள் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றியுள்ளீர்கள்.
ஆனால் பிழைக்கவந்த நாட்டில் அடங்கி ழாந்வத்தான் நியாயம் என்று உணர்ந்து வாழ்கிறீர்கள்.
பாராட்டுகள். இருந்தாலும் அவ்வப்போது ஊர் நினைவில் சிலர் சில நல்ல காரியங்கள்செய்கிறீர்கள்’
சிலரோ அய்யய்யோ நம் ஊரினை ஏன் நினைக்கவேண்டும் என்றும் கருதுகிறீர்கல். இங்கு உழைத்தோமா
வாழ்ந்தோமா என்று இருந்துவிட்டு பிள்ளைகளை அங்குள்ள கல்வியை பெரிய அளவில் பயிற்றுவித்து
அங்கேயே வாழ்ந்துவிடுவது என்று இருக்கிறார்கள். இன்று நிம்மதியாக வாழ்வது சரிதான்.அனால்
நீங்கள் யாவரும் ஒரு காலத்தில் மன்னின் மைந்தர்களால் எப்படி மதிக்கப்படுவீர்கல் என்று சற்று
எண்ணிப்பார்கவேண்டியது மிகமிக முதன்மையானது என்று தெரிவிக்கவிரும்புகிரேன்.
இதில் கவணிக்கவேண்டிய ஒரு செய்தியை உங்கள்முன் வைக்கவிரும்புகிறேன். உலகில்
உள்ள அனைத்து வெளிநாட்டினரில் ஆங்கிலேயர்கள் சற்று தேவலாம் என்று நமக்குத்தோண்ர்றும்.
ஏனென்றால் அவர்கள் நம்மை ஆளாமல் வேறு ந்நட்டுக்கார்ர்கள் ஆண்டிருந்தால் சுதந்திர உணர்ச்சி
நமக்கு ஏற்பட்டிருக்குமா? என்பது அய்யமானதுதான்.அனால் அவர்கள்தான் இனவெறியின் உச்சத்தில் இருந்த ,
இருக்கிர சிந்தனையாளர்கள் என்று அறிய வேண்டும் .அவர்கள் இந்தியாவில் கம்பெனி நடத்தி பின்
அர்சாங்கம் நடத்தி அடிமைப்படுத்தியவர்கள்.அப்போது இங்கிலாந்திலிருந்து வந்த சிலர் தன் குடும்பப்
பெண்களை அழைத்து வந்தனர்.மிகப்பலர் ஆண்களாக்த் தனியே வந்தவர்கள். இவர்கள் யாவருமே தமது
உடல் இச்சைக்காக இங்கிருந்த நமது பெண்களை குறிப்பாக வெள்ளைத்தோல் மேட்டுக்குடிப் பெண்களை
அனுபவித்துவந்தனர். இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. இந்தக்கலப்புக் குழந்தைகளை இவர்கள்
இங்கே இருந்தபோது பாராட்டி சீராட்டி வளர்த்தனர்.ஏன் இவர்கள் தன் சொந்த நாட்டிற்குப் போகும் போது கூட
சில ப்லாபலன்களை இவர்களுக்குச் செய்துவிட்டுத்தான் போயினர். எப்படித்தெரியுமா? அதற்கு முன் அந்தக்
குழந்தகளுக்கு என்ன இன அடயாளம் அவர்கள் கொடுத்தார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.
ஆங்கிலோ இந்தியர்கள். ஆங்கிலோ இந்தியர்களுக்கு மிக நல்ல உதவிகளை ,முன்னுரிமைகளை,இட ஒதிக்கீடுகளை
செய்துவைத்தார்கள். இன்றும் கூட தமிழக சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக ஒரு ஆங்கிலோ இந்தியர்
நியமிக்கப்படவேண்டும். பாராளுமன்ன்றத்திலும் இதே வகியில் ஏற்பாடு உண்டு. இரயிவே துறையில்
இவர்களுக்கு முன்னுரிமை உண்டு. இப்படி யெல்லாம் செய்துவிட்டு அவர்களை அவ்மானப் படுத்தியும்
செய்துள்ளார்களே ,அது புரிகிறதா?
அவர்களை எந்த இனமாக, எந்த நாட்டினராக அறிவித்தார்கள் என்ற வரலாற்று உண்மையை
புரிந்துகொள்ளுங்கள். ஆணின் வாரிசாக இங்கிலாந்துக்கு அழைத்துச்செல்லவில்லை.இந்தியனாக
விட்டுச்செல்லவில்லை. காரணம் ஆங்கிலேயனாக அவர்களை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இந்தியரில்
வேறொபாடான அடயாளத்தை தருகிறார்கள். என்னே கொடுமை. இந்தியன் என்று விட்டுவிட்டாலும்
பரவாயில்லை. கேவளப்படுத்திவிட்டானே. இந்த ஆங்கிலேயன் உயர்ந்த சிந்தனையாளன் என்று ஏற்கமுடியுமா?
அது போகட்டும் திருச்சிராப்பள்ளி என்ற ஊரில் ஒரு பகுதியை இவர்களின் நகரம் என்று ஆக்கிவைத்துவிட்டுப்
போனான். அன்னல் சில நாள் கழித்து இவர்கள் வாழ்வில் தொடர்புகள் அற்றுப் போய் ,குழுக்கள் அழிந்துபோய்
முடிந்தவர் முடிந்த இடத்தில் கலந்து நொந்துபோய் வாழப்பழகி ,இன்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு
வாழ்கிறார்கள். ஆனால் கிருத்தவர்களாகவே அவர்கள் வாழப் பழகியதால் கிருத்தவர்களாக் வாழ்கிறார்கல்.
இப்போது புலம் பெயர்ர்ந்து வாழும் தமிழர்கலே நீங்கள் எவ்வளவு சுகமாக வாழ்ந்தாலும் வந்தேரிகள்தான்.
வெள்நாட்டினர்தான். எனவே உங்கள் வேர்களை உணருங்கள்.இல்லையானால் உங்கள் வாரிசுகள் இன்னலுக்கு
ஆளாவார்கள் என்பது மட்டுமல்ல உங்களது வாழ்வையே குற்ற்ம் சொல்வார்கள். எல்லி நகையாடுவார்கள்.
விழித்துக்கொள்ளுங்கள். சிரிய சிரிய மனக்குறைகள் இருந்தாலும் அனைத்தையும் மறந்து தமிழ்ர்களே
இணையுங்கள், ஒன்றிணையுங்கள். இதுவே சரியான தருணம். ஆனாலும் உங்களின் சரியான இன ,கலாச்சார,
பண்பாடு,என உள்ளவிகளில் ஆரியத்தை புறந்தள்ளுங்கள். இந்து மதம் உங்கள் மதம் அல்ல. அது ஆரிய மதம்.ஏன்
மதம் பிடிக்காமளும் வாழலாம். திருநாவுக்கரசர் தமிழ் மதத்தவர். திருஞான சம்பந்தர் ஆரிய மததவர் என்று ஒரு
தமிழாராய்ச்சியாளர் சொல்கிறார். இனி ஆரியக் க்லாச்சாரத்தைக் கைக்கொண்டு பார்ப்பனர்களும் தமிழரே என்று
கலாச்சார அடிமையாகாதீர்கள். திருக்குறளில் எவ்வள்வோ செய்திகளைச் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் கோயிலுக்குப்
போய் தேங்காய் உடை,பார்ப்பானிடம் அடிமைப்படு,திருமணம் அவனை வைத்துச் செய் என்று சொல்லவில்லை.
அந்தனர் என்ஓர் இவரல்ல என்று அடையாளப் படுத்திக்காட்டத்தான் முயன்றுள்ளார் என்று தோண்றுகிறது.
வள்ளலரைக்கூட ஏற்க தமிழினம் முன்வரவில்லை. ஏன் என்றால் அவரும் கூட ஆரிய வருண வேருபாடு, சாத்திரங்களை
எதிர்த்தார். ந்ன்உ ஆராஉந்து மதம் பற்றுங்கள். தமிழ் என்ற மதம் வேண்டுமானால் பற்றுங்கள்.ஆரியத்தினை புறந்தள்ளுங்கள்.
இக்காளத்தில் பெரியார் காட்டும் தமிழ் சமூகம் காண முன்வாருங்கள். தேடுங்கள் உங்கள் வேர்களைத் தேடுங்கள்Thursday, September 8, 2011
அன்னாஅசாரே ரசிகர்களே காற்றில் குத்து விடாதீர்கள்.
ஊழல் ஒழிப்பில் நமக்கு மறுப்பில்லை. ஆனால் நீங்கள் ஊடக ,மேல்மட்ட சாதி,வசதி கொண்டதால் நகத்தில் அழுக்குப் படாமல் கூட்டம் சேர்த்து மக்கள் பிரச்சினைகளை பிந்தல்லப்பட வக்கிறீர்கள்..
ஒரு வாய்ப்புத்தருகிகோம்.
உங்கள் ஊரில் ஒரு குழு அமைத்து, சாலைகள் போடப்படுவதை கவனியுங்கள். சாலி போட குறைந்தது ஒரு அடி சல்லி போட வேண்டும். ஆனால் ஒரே ஒரு சல்லி மட்டும் பரப்பிவிட்டு வேலை செய்வதை தடுக்க முடியுமா? அதை செய்யுங்கள்.
ஆனால் அதைப்பற்றிக் கவலை இல்லை. யாரை ஏமாற்ற்ப்பாற்கிறீர்கள்.
மாமிசம் உண்ணக்கூடாது என்றும் சாப்பிடுகிறவர்களை கட்டிவைத்து அடிக்கவேண்டும் என்றும் அன்னாஅசாரேவின் மாதிரி கிராமத்தில் உள்ளது.
இது மத வாத போக்குஅல்லவா? இதுதான் பின்னனியா? ஒரு மதவாதக் கூட்டம் சாதி நிலைக்கவேண்டும் என்று கேட்டால் செய்துவிட வேண்டுமா? ஊழல் நடக்காமல் இருக்க செய்ய வேண்டிய வேலை செய்யாமல் நடந்தபின் அவ்னை தூக்கில்போடு என்பது தூக்கை நியாயப்படுத்தத்தானே? சனநாயகத்தில் நம்பிக்கை இருந்தால் அவரது மாதிரி கிராமத்தில்
20 ஆண்டுகளாக தேர்தல் இல்லையே ஏன்?
Wednesday, April 27, 2011
கருணாநிதியின் தகடுதித்தம்.
வேறு வழி இன்றி போர்குற்றம் பற்றி பதிவு தி.மு.க.வின் புத்தகத்தில்இருக்கவேண்டுமே என்று இன்று தி.மு.க. தீர்மானம் போட்டுள்ளது.உண்மையான நிலை எடுத்திருந்தால் போராட்டம் அறிவித்திருக்கவேண்டும். தமிழகம் முனைந்தால்
இந்தியா முனைய வாய்ப்புள்ளது. கணிமொழிக்காக அல்ல கருணாநிதிக்காகவே உயர்நிலைக்கூட்டம் கூடியுள்ளது.
கருணா மீது குற்றம் சொல்வதைவிட அங்கே இருக்கும் மற்ற அரசியல்வாதிகலின் ஒழுக்கத்தில்தான் அய்யம் ஏற்படுகிறது. இன்னுமா இப்படி .இவர்களுக்கு நற்சுரணை இல்லையா? இவர்கள் வீட்டுப்பெண்கள் இவர்களை மதிக்கிறார்களா? அந்தோ பாவம் அவர்களும். அது சரி , பேட்டித்தரும் போதும் குழப்புகிறாரே பாவம். ஈழம்தான் விடிவாம். பின் சிங்களவர்களும், தமிழ்ர்களும் சரிசமமாக வாழவேண்டுமாம். எங்கே தமிழீழத்திலா? இலங்கையிலா? சோனியா நெற்றியை உயர்த்தினால் எப்படிவேண்டுமாணாலும் மாற்றிக்கொள்ளலாம் என்று தகிடுதித்தமா? சீ...சீ.
Friday, April 8, 2011
தலையில் கல்லும்,பெரில் சாதியும்--ப்ய்ரட்சிக்கவிஞர்.
தமிழ்ப் புலவர் ஒருவர் புரட்சிக்கவிஞரின் ஒரு காப்பியத்தினை விளக்கினார்.
கற்பனையாக கவிஞர் மாற்று கிரகம் ஒன்றிற்குப்போகிறார். அன்கே வாழும் மனிதர்கள் யாவரும்
தமது தலையில் ஒரு பாறைக் கல்லினை சுமந்துக்கொண்டு இரு கைகளாலும் பிடித்துக்கொண்டும்
நடமாடுகிறார்கள். அவர்களிடம் இவர் "ஏன் இப்படி கல் சுமந்துக்கொண்டு அலைகிறீர்கள்" என்று
வினவினார். அதற்கு அவர்கள்" ஆகாஇது எங்கள் பாரம்பரியமானது, முன்னோர் செய்துவத்தது
புனிதமானது, கடைபிடிக்கவேண்டியது. நீங்கள் ஏன் செய்வதில்லை" என்பதாகக் கேட்டனர். அதற்குக்
கவிஞர் , " தேவை இல்லையப்பா இது இயல்புக்கு முரணனானது., அறியாமையானது,விட்டுவிடுங்கள்.
எங்களைப் போல சுமை இன்றி, கைகளை வீசி சுதந்திரமாக வாழமுடியும் . முயலுங்கள். ந்ல்வாழ்வு
வாழுங்கள்." என்பதாகச் சொன்னார். பின் அவர்கள் தலையில் இருந்த கல்லினை தூக்கி எரிந்துவிட்டு
ஒய்யாரமாக கைவீசி நடந்து மகிழ்ந்தார்கள். இப்படிச் சொல்லி , சாதியையும் நமதுமக்கள் பெயருக்குக்குப்
பின் சுமப்பதும் இதனை ஒப்பியதுதான் என்று தமிழர்களே விட்டொழியுங்கள் சாதிப்பெயர்களை என்று
அறிவுறுத்தினார்கலாம். சரியாகவே தடித்தத் தோலுக்கு ஊசியால் குத்தியுள்ளார். இதனை இன்றய
இளைஞர் சமூகம் செய்துவரும் இன்னொறு செய்கயையும் இதில் இணைத்து அடயாளப்படுத்தலாம். இன்று அறிவியல்
பெரும் சாதனைகளை, வசதிகளை, புது அறிவினை, கல்வி வாய்ப்பினைத் தந்துள்ளது. ஆனால்
மருத்துவப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள், அறிவியல் பட்டங்கள், பட்டமேல் படிப்புப்
படித்தவர்கள், இன்று உலகில் எங்கும் விஞ்சி நிற்கும் தகவல் தொழில் நுட்பம் பயின்றவர்களில் ஆகிய
பலர் தமது கையில்,கழுத்தில் ஏதோ ஒரு கயிறு கட்டிக்கொண்டுத் திரிகிறார்களே ,இதனைக் கண்டாலும் .
மேற்சொன்ன கவிஞரின் கூற்றுத்தான் நினைவுக்கு வருகிறது. இவர்களின் கல்வி, உழைப்பு, நடத்தை,பொருள்
இவைகளெல்லாம் செய்யாததை இந்த அழுக்குக் கயறு செய்யும் என்று நம்புகிறார்களே .இவர்களின் மதியை
என்னவென்றுச் சொல்வது. மோதிரங்களின் நிறம் ,மேல் டுண்டுகளின் நிறம் ,இப்படி எத்தனை மூட
நம்பிக்கைகள். அந்தோ பரிதாபம் .