Wednesday, November 24, 2010

வாரிசு சொத்துரிமை தடுப்புச்சட்டம்.

ஒரு மனிதன் தான் நல்வாழ்வு வாழ பொருள் வேண்டும்.வீடு, தொழில்,பிள்ளைகள் படிப்பு,அனைத்துக்கும் பணம் வேண்டும். உண்ண உணவு,உடுக்க உடை,இருக்கைடம் ஆகியவை கட்டாயத்தேவையாகும். இவை நிறைவேற பணம் வேண்டும். அதற்கு வருமானம் வேண்டும். வருமானம் ஈட்ட தொழில் வேண்டும். தொழில் செய்ய இன்று பயன வசதி ஊர்தி வேண்டும். மற்ற சராசரி குடும்பத்தார் போல் மதிக்கத்தக்க வகையில் அணி, மணி வேண்டும். பிள்ளைகள் நாம் சிரமப்படுவதுபோல் அல்லாமல் பிற்காலத்தில் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில் படிக்கவைக்க வேண்டும். அதற்கு நல்ல பள்ளியில் சேர்க்கப் பணம் வேண்டும். பணம் தேற்ற உழைப்பாளி பிழையாய் உழைத்து வேறு வழியில் பணம் சேர்க்கவேண்டும். வணிகர் மக்களை அதிகமாக ஏமாற்றி விற்க வேண்டும். பெருவணிகர் என்றால் வங்கிக்கடன் மற்றவர் கள் பெறமுடியாத நிலயில் எப்படியாவது பெற்று பொருளீட்ட வேண்டும். அரசு அலுவலர்கள் தம் பிள்ளைகளுக்கு பள்ளி,கல்லூரிகளுக்கு செலவுசெய்ய இல்ஞ்சம் வாங்கவேண்டும். ஒப்பந்தக்காரர்கள் முறைதவர்றி சிரிதாகவோ,பெரிதாகவோ திருடவேண்டும். அமைச்சர்கள் அவர்களின் உதவி கரமானவர்கள், காவலர்கள், யாவரும் தவரு செய்து சரியாக இருப்பதாகக் கணக்குக்காட்டி பொருளீட்டவேண்டும். இவைகளை சீராக்கிக்கொள்ள, வரிகளிருந்து தப்பிக்க மெத்தப்படித்த கணக்கர், வழக்காடிகள் ஆகியோரைப் பேணி பணம் பார்க்க வேண்டும். மருத்துவர்கள்,நோய்களைக்காட்டி மக்களைச்சுரண்ட வேண்டும். பொறியாளர்கள் கபடமாக சம்பாதிக்கவேண்டும். பொருளாதாரக்குற்றங்கள் ப்ல்கிப்பெருகிவிட்டன.ஒவ்வ்சொருவரும் தான் தன் வரைத்தான் இல்ஞ்சம் ,சுரண்டலை எதிக்கிறார்கள்.ஆனால் ஒவ்வொருவரும் தமக்காக அந்தத்தவறையே செய்யவேண்டிய நிலையில் உள்ளார்கள். என்னதான் தீர்வு? சட்டம், பப்புரை ,நீதிக்கதைகள் எல்லாம் பயனற்றுப்போய்விட்டன.
இத்ற்கெல்லாம் என்ன காரணம்? ப்ண்ம் ப்ண்ணவேண்டும். எதைச்செய்தாவது சாமர்த்தியம் செய்து சம்பாதிக்க வேண்டும். எவனையாவது மொல்லை அடிக்கவேண்டும்.அல்லது,அரசுச்சொத்தை,பணத்தை ஏதாவது ஒரு வழியில் சூரையாட வேண்டும். இதற்கு மாற்றே இல்லையா? யார்வேண்டுமாணாலும், எப்படிவேண்டுமானாலும் எவ்வளவுவேண்டுமானாலும் பணம், சொத்து சேர்க்கலாம் என்ற நிலை உள்ளது. ஏன் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் ப்ணம் சேர்த்து எப்படிப்பட்ட இன்பமும் நுகரளாம் என்ற நிலை உள்ளது. அப்படி இருக்கும் போது யார் நேர் வழியில் மட்டும் பணம் சேர்ப்பார்கள்?