Thursday, September 6, 2012


      அன்னா அசாரேயின் சண்டித்தனம் தோல்வி

ஊழல்      அன்னா அசாரேயின் சண்டித்தனம் தோல்வி
 ஒழிப்பென்று சொல்லி ஒரு மசோதாவை முன்வைத்து பெரிய அளவு போராடி
ஆள் சேர்த்த்தார் அசாரே. நல்ல செய்திதான். ஊழல் அரசுகளின் வேலையை மட்டும் கெடுக்கவில்லை.
உட் புகுந்து மக்களின் வாழ்வாதாரத்தையும் கெடுக்கிறது.அதனைவேரறுக்க கூட்டம் சேர்க்கவேண்டும்.
அந்தக்கூட்டம் சரியான் பாதையில் செல்லவேண்டும். பாபா ராம் தேவ் என்பவ்ர் அதில் கலந்து கொண்டதும் அது
 காவியாக்கப்பட்டது. காவி அரசியலார் அதனைப் பயன் படுத்த ஆயத்தமாயினர். குற்றச்சாட்டுகள் ஏற்படவே
 தேசியக் கொடி அங்கே மாற்றம் கொண்டது. மசோதா நிறைவேற நாள் குறித்து உண்ணா நோன்பு
அறிவித்து பின் விட்டுவிடப்பட்டது. உண்ணா நோன்பு என்ற பதம் காந்தியாரை முன் வைத்து பிரபலப்
 படுத்தப்பட்டுள்ளது. வெள்ளைக்காரன் உண்ணாவிரததை பார்த்து சுதந்திரம் கொடுத்ததாக சொல்லிச்
சொல்லி போர் குனத்தை மழுங்கடித்துவிட்டார்கள். உலகப்போர் சூழல் ,சமாளிக்கமுடியாத பொருட் சுமை
உலகத்தின் முன் தன்னை உயர்த்திக்கொள்ளும் தேவைகளும், பலபேரின் உயிர்த்தியாகமும்,சுதந்திரம் கிட்ட  .
வழிசெய்தது. சுதந்திரத்திற்குப்பின் ஒரு நாள் உண்ணாவிரதம் அடயாளமாக இருந்தால் விடுவார்கள். நீடித்தால்
கைது செய்வார்கள். இது சட்டம். நீண்ட நாள் இருந்தும் அரசு விட்டுவிட்டது என்றால் அது  மக்களின் ஆதரவுக்கு
பயந்து நீர்த்துப்போக வைக்கிறது என்று பொருள். அதன் பின் நடவடிக்கை எடுக்கும். மூன்று முறை இதற்காகவே இருந்து
பின்வாங்கப்பட்டது. பயனற்றுப்போனது மக்கள் சக்தி. மாறாக ழலை எதிர்த்து மக்கள் சிந்தனையை வளுவாக்கி எதிர்ப்புண்ர்வைக் கொண்டுவர முயன்றிருக்க
வேண்டும். இல்லாததால்தான் தோல்வியில் முடிந்தது.உண்ணாவிரதம் இருந்து தன் கருத்து சரியோ தவரோ எதிரி ஏற்றுத்தான்
ஆகவேண்டுமென்று கட்டாயப்படுத்துவது சண்டித்தனம்ல்லவா? காந்தியார் இருந்த போதும் பெரியார் இதனை சண்டித்தனம் என்று சொன்னார். எனவே சண்டித்தனம் தோல்வியுற்றது வியப்பில்லை. மாறாக அதனை மக்கள் பிரச்சினையாக்கவேண்டும்

இறைகற்பனைஇலான்