Tuesday, December 9, 2014



ரிசர்வ் வங்கி நிருவாகமும் மயிலாடுதுறை இராவணா ரெங்கசாமியும்.
.
.       மயிலாடுதுறை புத்தன் தேனீர்கடைஉரிமையாளர் அண்ணன் ரெங்கசாமி அவர்களின் வயது தற்போது 85 அய் தாண்டிவிட்டது பழம்பெரும் பெரியார் தொண்டர். பல பெரியாரியலாளருக்கு முன்னோடி. சமீபத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது நமது நாணயங்கள் பற்றி அவர் அங்களாய்த்தார்.
    அவரிடம் ஒரு சிறப்புண்டு. அவரது கடையில் உணவு உண்ணாத தி. க. பேச்சாளர்களே இல்லை. கூட்டங்கள், வழிநடைப் பயண்ங்கள், ஆகியவற்றின் போது வருவோர்க்கெல்லாம் அங்கேதான்  இலவச உணவு. அவரது துணைவியாரும் மனமுவந்து செய்வார். அது ஒரு கட்சி அலுவலகம்தான். பிறகுதான் கடை .அப்படி இருக்கும் நிலை. எப்போதும் மூடநம்பிக்கைக்கு மாற்றாகவும்,பகுத்தறிவுக் கருத்துக்களும் புழக்கத்தில் இருக்கும். அதிலும் அண்ணன் ரெங்கசாமி அவர்கள் வருவோர் போவோரிடமெல்லாம் கருத்துமழைப் பொழிவார். காசு கொடுத்து சாப்பிட்டவிட்டு இதனையும் கேட்டு சிரித்துக்கொண்டேபோவார்கள். நான் அவரின் பேச்சுகளை கவணித்த்தில்தான் அவரை “ராவணா ரெங்கசாமிஎன்று அழைப்பேன். யாராவது கடைக்கு  வருவோர் அவரது கடயில் மூடநம்பிக்கையுடன் எதார்த்தமாகப் பேசுவார்கள்,  அப்போது இவர் “ராவணா...ராவணாஎன்று பதிலுரைத்து ஆயாசப்படுவதுபோல் பேசுவார். வந்தவரும் விழி பிதிங்கிவிடுவார், மற்றவரும் சிரித்துவிடுவார்கள் ராமா, ராமா என்று எதெற்கெடுத்தாலும் அயர்ச்சிகொள்ளும் மக்களிடையே இவர் ராவணா, ராவணா என்று கூவும் போது ,அது ஒருவித அறிவு விளக்கமாகவும்,இராமன் ந்ம்மவன் இல்லை ராவணன் நம்மவன் என்ற எண்ணத்தியும் திராவிடத்தமிழன் நாம் ஆரியனை ஏற்காதே என்ற இயக்கப் பிரச்சாரத்தையும் அந்த நொடிப்பொழுதில் புரியவைத்துவிடுவார். அவர் ஒரு பெரியார் பிரச்சாரத்தின் ஒற்றை ராணுவம். எனவே அவ்வப்போது போய் ஒரு ராயல் சல்யூட்அடித்து தலைவரை வணஙிவிட்டு பேசிவிட்டு வருவது வழக்கம். அப்படித்தான் இந்த ரிசர்வ் வங்கி  நிருவாகம் பற்றியும் பேசினார்.
   அவர் தேநீர், உணவுக் கடை வைத்திருப்பதால் பலபேர் வருவார்கள்.  சில்லரை நாணயப் புழக்கம் அதிகம். இப்போது வெளிவந்திருக்கும் நாணய வில்லைகளில் 50காசு, ஒரு ரூபாய், 2 ரூபாய்,5ரூபாய் எல்லாம் மிக மிக கவணித்துக் கொடுத்தால்தான் சரியாக இருக்கிறது. ஏரத்தாழ எல்லாம் ஒன்று போல்தானே உள்ளன. இதில் நுகர்வோர் படும் சிரமம் அந்த ரிசர் வங்கி மேதாவிகளுக்குத்தெரியாது. ராவணா ரெங்கசாமி என்ன சொல்கிறார் என்றால், இந்தக் காசுகள் பல வடிவங்களில் முன்னர் போடப்பட்டது,. ஏனென்றால் அதன் வடிவத்தை தடவிப் பார்த்து எவ்வளவு மதிப்பு என்று கண் பழுதானவர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நியதியில்தான். இப்போதெல்லாம் வெளிவரும் நாணய வில்லைகளால் கண்தெரிபவர்களே தடுமாறவேண்டியுள்ளது. இது நியாயமா? இவர்கள் (வங்கியாளர்கள்) மெத்தப் படித்தென்ன புயன். மக்களின் பயனுக்கில்லாத கல்வி,பதவிகள் எதற்காக? இப்போதெல்லாம் மருத்துவ மனைகள் பொதுப் பயன்பாட்டு இடங்களில் முடவர்களுக்குப் பயன்பட படிகளுக்கருகில் சருக்கைகளும் இருக்கவேண்டும் என்ற நியதி கட்டாயப் படுதப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் இப்படி இவர்கள் அறியாமையாய் காசு வில்லைகள் (துட்டு) போடுவது நியாயமா? வங்கிகளின் ஏடிஎம் களிலேயே பிரைலி எழுத்துகள் சில இடங்களில் பதிண்ட்யப்பட்டுள்ளா. எனவே  வாய்ப்புள்ளவர்கள் எங்கே யாரிடம் சொல்லி இந்த சில்லரை நாணயம் அச்சிடும் வேலையை அறிவு பூர்னமாகச் செய்யச் சொல்லுங்களேன்.       
                                  இறை கற்பனை இலான், இரசீத்கான்                                                                                     

.

No comments :