Tuesday, December 9, 2014



ரிசர்வ் வங்கி நிருவாகமும் மயிலாடுதுறை இராவணா ரெங்கசாமியும்.
.
.       மயிலாடுதுறை புத்தன் தேனீர்கடைஉரிமையாளர் அண்ணன் ரெங்கசாமி அவர்களின் வயது தற்போது 85 அய் தாண்டிவிட்டது பழம்பெரும் பெரியார் தொண்டர். பல பெரியாரியலாளருக்கு முன்னோடி. சமீபத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது நமது நாணயங்கள் பற்றி அவர் அங்களாய்த்தார்.
    அவரிடம் ஒரு சிறப்புண்டு. அவரது கடையில் உணவு உண்ணாத தி. க. பேச்சாளர்களே இல்லை. கூட்டங்கள், வழிநடைப் பயண்ங்கள், ஆகியவற்றின் போது வருவோர்க்கெல்லாம் அங்கேதான்  இலவச உணவு. அவரது துணைவியாரும் மனமுவந்து செய்வார். அது ஒரு கட்சி அலுவலகம்தான். பிறகுதான் கடை .அப்படி இருக்கும் நிலை. எப்போதும் மூடநம்பிக்கைக்கு மாற்றாகவும்,பகுத்தறிவுக் கருத்துக்களும் புழக்கத்தில் இருக்கும். அதிலும் அண்ணன் ரெங்கசாமி அவர்கள் வருவோர் போவோரிடமெல்லாம் கருத்துமழைப் பொழிவார். காசு கொடுத்து சாப்பிட்டவிட்டு இதனையும் கேட்டு சிரித்துக்கொண்டேபோவார்கள். நான் அவரின் பேச்சுகளை கவணித்த்தில்தான் அவரை “ராவணா ரெங்கசாமி” என்று அழைப்பேன். யாராவது கடைக்கு  வருவோர் அவரது கடயில் மூடநம்பிக்கையுடன் எதார்த்தமாகப் பேசுவார்கள்,  அப்போது இவர் “ராவணா...ராவணா” என்று பதிலுரைத்து ஆயாசப்படுவதுபோல் பேசுவார். வந்தவரும் விழி பிதிங்கிவிடுவார், மற்றவரும் சிரித்துவிடுவார்கள் ராமா, ராமா என்று எதெற்கெடுத்தாலும் அயர்ச்சிகொள்ளும் மக்களிடையே இவர் ராவணா, ராவணா என்று கூவும் போது ,அது ஒருவித அறிவு விளக்கமாகவும்,இராமன் ந்ம்மவன் இல்லை ராவணன் நம்மவன் என்ற எண்ணத்தியும் திராவிடத்தமிழன் நாம் ஆரியனை ஏற்காதே என்ற இயக்கப் பிரச்சாரத்தையும் அந்த நொடிப்பொழுதில் புரியவைத்துவிடுவார். அவர் ஒரு பெரியார் பிரச்சாரத்தின் ஒற்றை ராணுவம். எனவே அவ்வப்போது போய் ஒரு ”ராயல் சல்யூட்” அடித்து தலைவரை வணஙிவிட்டு பேசிவிட்டு வருவது வழக்கம். அப்படித்தான் இந்த ரிசர்வ் வங்கி  நிருவாகம் பற்றியும் பேசினார்.
   அவர் தேநீர், உணவுக் கடை வைத்திருப்பதால் பலபேர் வருவார்கள்.  சில்லரை நாணயப் புழக்கம் அதிகம். இப்போது வெளிவந்திருக்கும் நாணய வில்லைகளில் 50காசு, ஒரு ரூபாய், 2 ரூபாய்,5ரூபாய் எல்லாம் மிக மிக கவணித்துக் கொடுத்தால்தான் சரியாக இருக்கிறது. ஏரத்தாழ எல்லாம் ஒன்று போல்தானே உள்ளன. இதில் நுகர்வோர் படும் சிரமம் அந்த ரிசர் வங்கி மேதாவிகளுக்குத்தெரியாது. ராவணா ரெங்கசாமி என்ன சொல்கிறார் என்றால், இந்தக் காசுகள் பல வடிவங்களில் முன்னர் போடப்பட்டது,. ஏனென்றால் அதன் வடிவத்தை தடவிப் பார்த்து எவ்வளவு மதிப்பு என்று கண் பழுதானவர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நியதியில்தான். இப்போதெல்லாம் வெளிவரும் நாணய வில்லைகளால் கண்தெரிபவர்களே தடுமாறவேண்டியுள்ளது. இது நியாயமா? இவர்கள் (வங்கியாளர்கள்) மெத்தப் படித்தென்ன புயன். மக்களின் பயனுக்கில்லாத கல்வி,பதவிகள் எதற்காக? இப்போதெல்லாம் மருத்துவ மனைகள் பொதுப் பயன்பாட்டு இடங்களில் முடவர்களுக்குப் பயன்பட படிகளுக்கருகில் சருக்கைகளும் இருக்கவேண்டும் என்ற நியதி கட்டாயப் படுதப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் இப்படி இவர்கள் அறியாமையாய் காசு வில்லைகள் (துட்டு) போடுவது நியாயமா? வங்கிகளின் ஏடிஎம் களிலேயே பிரைலி எழுத்துகள் சில இடங்களில் பதிண்ட்யப்பட்டுள்ளா. எனவே  வாய்ப்புள்ளவர்கள் எங்கே யாரிடம் சொல்லி இந்த சில்லரை நாணயம் அச்சிடும் வேலையை அறிவு பூர்னமாகச் செய்யச் சொல்லுங்களேன்.       
                                  இறை கற்பனை இலான், இரசீத்கான்                                                                                     

.

Saturday, August 23, 2014

தமிழ் தேசியம் பேசுவோரை சந்தேகிக்கிறோம்.

தமிழ் தேசியம் பேசுவோரை சந்தேகிக்கிறோம்.

          ஆம் புலிப்பார்வை படம் தொடர்பாக வெளிவரும் கருத்துகள் பார்க்கும்போது மிகவும் அச்சமாக உள்ளது.
பிரபாகரன் மரிக்கவில்லை என்று சொன்னதால் தமிழ் நாட்டில் புரட்சிகர உணர்வு ஏற்படாமல் தடை பட்டது என்ற எண்ணம் உண்மைதானோ என்று தோண்றுகிறது. செல்வன் பாலா வரிச்சட்டைகளில் இருந்ததாகவும் போர்முனையிலேயே சுடப்பட்டான் என்றும் அவனது பேச்சில் எந்தந்தையை உஙளால் பிடிக்கமுடியாது...என்று மீண்டும் மீண்டும் சொல்லவைத்து குழப்புவதும்,இப்படிப்பட்டவர்களுக்குகு பழ நெடுமாறன்,சீமான் ,சிங்களத்தில் கல்விப்பணி செய்து கட்டணம் வசூலிக்கும் பச்சமுத்து பாரிவேந்தன்,யாவரும் இந்திய உளவுத்துறைக்கும் சிங்கள சூழ்ச்சிக்கும் இடம் கொடுத்தவர்கள் என்று கருதி சந்தேகப்பட வேண்டியுள்ளது.

Saturday, May 11, 2013


Sunday, May 5, 2013

   ராசிவ் காந்தியின் கொலை வழக்கில்26 பேருக்கு தடலடியாக தவராக தூக்குதண்டனையை நீதிமன்றம் கொடுத்தது.
தமிழ் நாட்டின் சிறு குழுக்கள் என்று கருதும் பழ நெடுமாறன், வைகோ,வழக்கற்ஞர் மயிலாடுதுறை ராமதாசு,அவரதுஉதவியாள்ர் ஏட்டு ராசமாணிக்கம்,மனியரசன்,போன்ற தமிழ் ஆர்வள்ர்கள் மக்களிடம் பணம் வசூலித்து,வழக்கு நடத்தி 19 உயிகளை அன்றே காப்பாற்றினார்கள். இன்று மீதி மூண்று பேரை மீண்டும் தூக்கிளிட துடிக்கும் இந்திய தேசிய பைத்தியங்களே 19 பெரையும் சும்மா விட்டிருந்தால்,தூக்கில் போட அனுமதித்திருந்தால் அந்த உயிர்களை (மறைமுக விசாரணை மற்றும் அதிகார ஆதிக்கத்துடன்) தூக்கிலிட்டால் திருப்பித்தர முடியுமா? அதிகார வர்க்கமே, மக்களே வேண்டாம் மரண தண்டனை. வேண்டாம் மரண தண்டனை.

Wednesday, April 10, 2013


Thursday, September 6, 2012


      அன்னா அசாரேயின் சண்டித்தனம் தோல்வி

ஊழல்      அன்னா அசாரேயின் சண்டித்தனம் தோல்வி
 ஒழிப்பென்று சொல்லி ஒரு மசோதாவை முன்வைத்து பெரிய அளவு போராடி
ஆள் சேர்த்த்தார் அசாரே. நல்ல செய்திதான். ஊழல் அரசுகளின் வேலையை மட்டும் கெடுக்கவில்லை.
உட் புகுந்து மக்களின் வாழ்வாதாரத்தையும் கெடுக்கிறது.அதனைவேரறுக்க கூட்டம் சேர்க்கவேண்டும்.
அந்தக்கூட்டம் சரியான் பாதையில் செல்லவேண்டும். பாபா ராம் தேவ் என்பவ்ர் அதில் கலந்து கொண்டதும் அது
 காவியாக்கப்பட்டது. காவி அரசியலார் அதனைப் பயன் படுத்த ஆயத்தமாயினர். குற்றச்சாட்டுகள் ஏற்படவே
 தேசியக் கொடி அங்கே மாற்றம் கொண்டது. மசோதா நிறைவேற நாள் குறித்து உண்ணா நோன்பு
அறிவித்து பின் விட்டுவிடப்பட்டது. உண்ணா நோன்பு என்ற பதம் காந்தியாரை முன் வைத்து பிரபலப்
 படுத்தப்பட்டுள்ளது. வெள்ளைக்காரன் உண்ணாவிரததை பார்த்து சுதந்திரம் கொடுத்ததாக சொல்லிச்
சொல்லி போர் குனத்தை மழுங்கடித்துவிட்டார்கள். உலகப்போர் சூழல் ,சமாளிக்கமுடியாத பொருட் சுமை
உலகத்தின் முன் தன்னை உயர்த்திக்கொள்ளும் தேவைகளும், பலபேரின் உயிர்த்தியாகமும்,சுதந்திரம் கிட்ட  .
வழிசெய்தது. சுதந்திரத்திற்குப்பின் ஒரு நாள் உண்ணாவிரதம் அடயாளமாக இருந்தால் விடுவார்கள். நீடித்தால்
கைது செய்வார்கள். இது சட்டம். நீண்ட நாள் இருந்தும் அரசு விட்டுவிட்டது என்றால் அது  மக்களின் ஆதரவுக்கு
பயந்து நீர்த்துப்போக வைக்கிறது என்று பொருள். அதன் பின் நடவடிக்கை எடுக்கும். மூன்று முறை இதற்காகவே இருந்து
பின்வாங்கப்பட்டது. பயனற்றுப்போனது மக்கள் சக்தி. மாறாக ஊழலை எதிர்த்து மக்கள் சிந்தனையை வளுவாக்கி எதிர்ப்புண்ர்வைக் கொண்டுவர முயன்றிருக்க
வேண்டும். இல்லாததால்தான் தோல்வியில் முடிந்தது.உண்ணாவிரதம் இருந்து தன் கருத்து சரியோ தவரோ எதிரி ஏற்றுத்தான்
ஆகவேண்டுமென்று கட்டாயப்படுத்துவது சண்டித்தனம்ல்லவா? காந்தியார் இருந்த போதும் பெரியார் இதனை சண்டித்தனம் என்று சொன்னார். எனவே சண்டித்தனம் தோல்வியுற்றது வியப்பில்லை. மாறாக அதனை மக்கள் பிரச்சினையாக்கவேண்டும்

இறைகற்பனைஇலான்

Sunday, January 15, 2012

புல்ம்பெயர் தமிழர்களே உங்கள் இருப்பு எந்தவகை.

பொங்கல் வாழ்த்துகள்.

புலம்பெயர்ந்த தமிழர்களே உங்கள் இருப்பு எவ்வகை ?

தமிழர்களே புலம் பெயர்ந்து உழைத்து அடைந்த நாட்டின் உயர்வுக்கு உழைத்து

வாழ்ந்துள்ளீர்கள். ஆனால் அத்துடன் உங்கள் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றியுள்ளீர்கள்.

ஆனால் பிழைக்கவந்த நாட்டில் அடங்கி ழாந்வத்தான் நியாயம் என்று உணர்ந்து வாழ்கிறீர்கள்.

பாராட்டுகள். இருந்தாலும் அவ்வப்போது ஊர் நினைவில் சிலர் சில நல்ல காரியங்கள்செய்கிறீர்கள்’

சிலரோ அய்யய்யோ நம் ஊரினை ஏன் நினைக்கவேண்டும் என்றும் கருதுகிறீர்கல். இங்கு உழைத்தோமா

வாழ்ந்தோமா என்று இருந்துவிட்டு பிள்ளைகளை அங்குள்ள கல்வியை பெரிய அளவில் பயிற்றுவித்து

அங்கேயே வாழ்ந்துவிடுவது என்று இருக்கிறார்கள். இன்று நிம்மதியாக வாழ்வது சரிதான்.அனால்

நீங்கள் யாவரும் ஒரு காலத்தில் மன்னின் மைந்தர்களால் எப்படி மதிக்கப்படுவீர்கல் என்று சற்று

எண்ணிப்பார்கவேண்டியது மிகமிக முதன்மையானது என்று தெரிவிக்கவிரும்புகிரேன்.

இதில் கவணிக்கவேண்டிய ஒரு செய்தியை உங்கள்முன் வைக்கவிரும்புகிறேன். உலகில்

உள்ள அனைத்து வெளிநாட்டினரில் ஆங்கிலேயர்கள் சற்று தேவலாம் என்று நமக்குத்தோண்ர்றும்.

ஏனென்றால் அவர்கள் நம்மை ஆளாமல் வேறு ந்நட்டுக்கார்ர்கள் ஆண்டிருந்தால் சுதந்திர உணர்ச்சி

நமக்கு ஏற்பட்டிருக்குமா? என்பது அய்யமானதுதான்.அனால் அவர்கள்தான் இனவெறியின் உச்சத்தில் இருந்த ,

இருக்கிர சிந்தனையாளர்கள் என்று அறிய வேண்டும் .அவர்கள் இந்தியாவில் கம்பெனி நடத்தி பின்

அர்சாங்கம் நடத்தி அடிமைப்படுத்தியவர்கள்.அப்போது இங்கிலாந்திலிருந்து வந்த சிலர் தன் குடும்பப்

பெண்களை அழைத்து வந்தனர்.மிகப்பலர் ஆண்களாக்த் தனியே வந்தவர்கள். இவர்கள் யாவருமே தமது

உடல் இச்சைக்காக இங்கிருந்த நமது பெண்களை குறிப்பாக வெள்ளைத்தோல் மேட்டுக்குடிப் பெண்களை

அனுபவித்துவந்தனர். இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. இந்தக்கலப்புக் குழந்தைகளை இவர்கள்

இங்கே இருந்தபோது பாராட்டி சீராட்டி வளர்த்தனர்.ஏன் இவர்கள் தன் சொந்த நாட்டிற்குப் போகும் போது கூட

சில ப்லாபலன்களை இவர்களுக்குச் செய்துவிட்டுத்தான் போயினர். எப்படித்தெரியுமா? அதற்கு முன் அந்தக்

குழந்தகளுக்கு என்ன இன அடயாளம் அவர்கள் கொடுத்தார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.

ஆங்கிலோ இந்தியர்கள். ஆங்கிலோ இந்தியர்களுக்கு மிக நல்ல உதவிகளை ,முன்னுரிமைகளை,இட ஒதிக்கீடுகளை

செய்துவைத்தார்கள். இன்றும் கூட தமிழக சட்டமன்றத்தில் நியமன உறுப்பினராக ஒரு ஆங்கிலோ இந்தியர்

நியமிக்கப்படவேண்டும். பாராளுமன்ன்றத்திலும் இதே வகியில் ஏற்பாடு உண்டு. இரயிவே துறையில்

இவர்களுக்கு முன்னுரிமை உண்டு. இப்படி யெல்லாம் செய்துவிட்டு அவர்களை அவ்மானப் படுத்தியும்

செய்துள்ளார்களே ,அது புரிகிறதா?

அவர்களை எந்த இனமாக, எந்த நாட்டினராக அறிவித்தார்கள் என்ற வரலாற்று உண்மையை

புரிந்துகொள்ளுங்கள். ஆணின் வாரிசாக இங்கிலாந்துக்கு அழைத்துச்செல்லவில்லை.இந்தியனாக

விட்டுச்செல்லவில்லை. காரணம் ஆங்கிலேயனாக அவர்களை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இந்தியரில்

வேறொபாடான அடயாளத்தை தருகிறார்கள். என்னே கொடுமை. இந்தியன் என்று விட்டுவிட்டாலும்

பரவாயில்லை. கேவளப்படுத்திவிட்டானே. இந்த ஆங்கிலேயன் உயர்ந்த சிந்தனையாளன் என்று ஏற்கமுடியுமா?

அது போகட்டும் திருச்சிராப்பள்ளி என்ற ஊரில் ஒரு பகுதியை இவர்களின் நகரம் என்று ஆக்கிவைத்துவிட்டுப்

போனான். அன்னல் சில நாள் கழித்து இவர்கள் வாழ்வில் தொடர்புகள் அற்றுப் போய் ,குழுக்கள் அழிந்துபோய்

முடிந்தவர் முடிந்த இடத்தில் கலந்து நொந்துபோய் வாழப்பழகி ,இன்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு

வாழ்கிறார்கள். ஆனால் கிருத்தவர்களாகவே அவர்கள் வாழப் பழகியதால் கிருத்தவர்களாக் வாழ்கிறார்கல்.

இப்போது புலம் பெயர்ர்ந்து வாழும் தமிழர்கலே நீங்கள் எவ்வளவு சுகமாக வாழ்ந்தாலும் வந்தேரிகள்தான்.

வெள்நாட்டினர்தான். எனவே உங்கள் வேர்களை உணருங்கள்.இல்லையானால் உங்கள் வாரிசுகள் இன்னலுக்கு

ஆளாவார்கள் என்பது மட்டுமல்ல உங்களது வாழ்வையே குற்ற்ம் சொல்வார்கள். எல்லி நகையாடுவார்கள்.

விழித்துக்கொள்ளுங்கள். சிரிய சிரிய மனக்குறைகள் இருந்தாலும் அனைத்தையும் மறந்து தமிழ்ர்களே

இணையுங்கள், ஒன்றிணையுங்கள். இதுவே சரியான தருணம். ஆனாலும் உங்களின் சரியான இன ,கலாச்சார,

பண்பாடு,என உள்ளவிகளில் ஆரியத்தை புறந்தள்ளுங்கள். இந்து மதம் உங்கள் மதம் அல்ல. அது ஆரிய மதம்.ஏன்

மதம் பிடிக்காமளும் வாழலாம். திருநாவுக்கரசர் தமிழ் மதத்தவர். திருஞான சம்பந்தர் ஆரிய மததவர் என்று ஒரு

தமிழாராய்ச்சியாளர் சொல்கிறார். இனி ஆரியக் க்லாச்சாரத்தைக் கைக்கொண்டு பார்ப்பனர்களும் தமிழரே என்று

கலாச்சார அடிமையாகாதீர்கள். திருக்குறளில் எவ்வள்வோ செய்திகளைச் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் கோயிலுக்குப்

போய் தேங்காய் உடை,பார்ப்பானிடம் அடிமைப்படு,திருமணம் அவனை வைத்துச் செய் என்று சொல்லவில்லை.

அந்தனர் என்ஓர் இவரல்ல என்று அடையாளப் படுத்திக்காட்டத்தான் முயன்றுள்ளார் என்று தோண்றுகிறது.

வள்ளலரைக்கூட ஏற்க தமிழினம் முன்வரவில்லை. ஏன் என்றால் அவரும் கூட ஆரிய வருண வேருபாடு, சாத்திரங்களை

எதிர்த்தார். ந்ன்உ ஆராஉந்து மதம் பற்றுங்கள். தமிழ் என்ற மதம் வேண்டுமானால் பற்றுங்கள்.ஆரியத்தினை புறந்தள்ளுங்கள்.

இக்காளத்தில் பெரியார் காட்டும் தமிழ் சமூகம் காண முன்வாருங்கள். தேடுங்கள் உங்கள் வேர்களைத் தேடுங்கள்