சிங்கப்பூர் கோயில் சிலைகள் ஆர்டர்.
ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து கோயிலுக்குத்தேவையான கடவுளர் சிலைகள் ஆர்டர் கொடுக்க வங்திருந்தார்கள்.ஒருவர் எனது அலுவலகத்தில் மாட்டியிருந்த பெரியார்,அம்பேத்கார் படங்களைப் பார்த்துவிட்டு இதற்க்கு ஏன் கடவுள் உற்பத்தி மையம் என்ரு பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்டனர். நான் கடவுள் தானே உற்பத்தி செய்கிறேன் என்று கேட்டேன். கடவுள் இல்லை என்று சொல்லும் நீங்களேன் கடவுள் சிலைகளை ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்.
நீங்கள்தான் கடவுள் உண்டு என்று சொல்கிரீர்களே ஏன் சிங்கையிலிருந்து இங்கு வந்து ஆர்டர் கொடுக்கிரீர்கள்? அங்கேயே செய்யலாமே? என்றேன்.
அவர் எங்களுக்கு சிலை செய்யத்தெரியாதே என்றார். அதற்கு நான், நீங்கள் கற்றுக்கொண்ட தொழிலை நீங்கள் செய்கிறீர்கள், நான் கற்றுக்கொண்ட தொழிலை நான் செய்கிறேன், வருபவர்கள் பக்தியுடன் வருவதால் வருமானமும் உழைப்பைவிட அதிகமாகவே கிடைக்கிறது.அதைக்கொண்டுதான் என்னிடம் பயிலும் மானவர்களுக்கு இலவச பயிற்சியும் பல உதவிகளையும் செய்யமுடிகிறது. வாழ்க்கைக்கு பலவும் தேவைப்படுகிறது.எனக்கு சாமிசிலைகள் செய்ய ம்ட்டுமே தெரியும். உங்களுக்கு கும்பிட மட்டுமே தெரியும். மேலும் , நான் கடவுள் சிலையானாலும் ,கழுதை சிலையானாலும் கிலோ ஒன்றிற்கு ரூ .1500/= தான் வாங்குகிறேன்.
கடவுளுக்கு ஒரு விலையோ கழுதைக்கு ஒரு விலையோ கிடையாது.
மேலும் கழுதை, நாய்,பன்றி, கடவுள் எல்லாவற்றிற்கும் ஒரே தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படும். கருவிகளும் ஒன்றேதான்.என்னைப் பொருத்தவரை நீங்கள் கேட்டபடி ஒரு உருவத்தை செய்து கொடுக்கிறேன். நீங்கள் தான் அதை பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகிறீர்கள். ஒரு சிலையின் கய்யில் வேலைக்கொடுத்தால் முருகன் என்கிறீர்கள், அதே சிலையில் வேலைப் பிடுங்கி வில்லைக்கொடுத்தால் ராமன் எங்கிறீர்கள். சங்கு சக்கரம் கொடுத்தால் பெருமாள் என்கிறீர்கள். அதையும் எடுத்துவிட்டு மான் ,மழு கொடுத்தால் சிவன் என்கிறீர்கள். ஒரு புல்லாங்குழல் கொடுத்தாள் கிருஷ்ணன் என்கிறீர்கள். ஆகவே ஆயுதங்களை வைத்துத்தான் அடையாளம் காண்கிறீர்கள்.
நான் செய்வதெல்லாம் ஒரு ஆண் உருவம்,ஒரு பெண் உருவம்
ஆயுதங்களை மாற்றி வய்த்துக்கொண்டால் எந்தக்கடவுளாகவும்
ஆக்கிவிடலாம்.பெண் சிலையை எந்த ஆண் சிலையிடம் வைக்கிறோமோ உடனே அது அவனுடைய மனைவி ஆகிவிடுகிறது, என்று விளக்கிக்காட்டினேன்.
அதற்கு அவர் நீங்கள் செய்யும் சிலைகளில் எந்த சக்தியும் கிடையாது. எங்கள் ஊர் அர்ச்சகர் ஒரு யந்திர தகட்டை நீங்கள் செய்யும் சிலையின் அடியில் பதிக்கவேண்டும் என்று சொல்லி ஒரு தகட்டைக் காண்பித்தார். அதில் புரியாத மொழியில் கிருக்கி இருந்தது. நான் இந்த தகட்டில்தான் சக்தியுள்ளதே அதை வைத்து கும்பிடவேண்டியதுதானே,ஏன் தேவையில்லாமல் சக்தியற்ற சில்சியைச் செய்கிறீர்கள்?என்று கேட்டேன். ஆமாம் நீங்கள் சொல்வதும் உண்மைதானே என்றார்கள். சக்தியுள்ள தகடு இருக்கும் போது ஏன் சிலையைச்செய்யச் சொன்னார்கள் என்று என்னிடமே
கேட்டார்கள்.
அய்யா,இந்த சிலையை வைத்துத்தான் அவர்கள் தேர் தெப்பம்,சந்தனக்காப்பு, அபிசேகம் கடவுளுக்கே ஆண்டுதோரும் திருமணம் என்று எதய்யாவது சொல்லி உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியும்.யந்திர தகட்டை வைத்து இதையெல்லாம் செய்தால் யார் வேடிக்கை பார்ப்பார்கள்? எதையாவது சொல்லி திராவிடர்களிடம் உள்ள செல்வத்தையும் ,அறிவையும் கொள்ளையடிப்பதுதான் ஆரியர்களின் அன்றாட வேலை நீங்கள் கேட்டதினால் இவ்வளவும் சொல்கிறேன், என்று சொன்னேன்.
சிற்பி இராசன். – நூல் நாம் அறிந்தவைதான்; ஆனால்,நாம் சிந்திக்காதவை. கீதாலயனின் நினைவுகள் சட்டக் கல்வி மையம் வெளியீடு.72,பக்தபுரித் தெரு, கும்பக்கோணம். தொ.பே.0435 2402857.
Saturday, September 12, 2009
Subscribe to:
Post Comments
(
Atom
)
1 comment :
//ஒரு சிலையின் கய்யில் வேலைக்கொடுத்தால் முருகன் என்கிறீர்கள், அதே சிலையில் வேலைப் பிடுங்கி வில்லைக்கொடுத்தால் ராமன் எங்கிறீர்கள். சங்கு சக்கரம் கொடுத்தால் பெருமாள் என்கிறீர்கள். அதையும் எடுத்துவிட்டு மான் ,மழு கொடுத்தால் சிவன் என்கிறீர்கள். ஒரு புல்லாங்குழல் கொடுத்தாள் கிருஷ்ணன் என்கிறீர்கள். ஆகவே ஆயுதங்களை வைத்துத்தான் அடையாளம் காண்கிறீர்கள்.
நான் செய்வதெல்லாம் ஒரு ஆண் உருவம்,ஒரு பெண் உருவம்
ஆயுதங்களை மாற்றி வய்த்துக்கொண்டால் எந்தக்கடவுளாகவும்
ஆக்கிவிடலாம்.பெண் சிலையை எந்த ஆண் சிலையிடம் வைக்கிறோமோ உடனே அது அவனுடைய மனைவி ஆகிவிடுகிறது, //
உண்மையோ உண்மை !
Post a Comment