Tuesday, February 3, 2009

இன்றய ஈழப்பிரச்சினை

இன்றய ஈழப்பிரச்சினையின் கவனம் தேர்தல் உத்தி பிரிவதாகவே உள்ளது. சரியாகச்செய்யவேண்டும் என்றால் இனி தமிழ்நாட்டில் உட்கார்ந்துகொண்டு நீ செய்தாயா நான் செய்தேனா என்று காலம்
ஓட்டாமல் தலைவர்கள் யாவரும் தில்லி சென்று மத்திய அரசை
என்ன செய்யப்போகிறது என்று முடிவாகக்கேட்க வேண்டும்.

அப்பாவித்தமிழர்களைக்காப்பாற்றுவோம் என்று கூறுவதில்
இனி அர்த்தமில்லை.
பேச்சுவார்த்தை நடத்த தமிழகத் தலைவர்கலை போகச்சொல்லும் இந்திய அமைச்சர் அதற்கான வாய்ப்பினைத்
தரும் வழியாக விடுதலைப்புலிகலின் மீதான தடையை நீக்கவேண்டும்.

அதனைச்செய்யாமல் வெறும் பேச்சு என்பது காலம் கடத்தி மனிதப்படுகொலை நடத்துவதுடன் ஒரு இன அழிப்பு வேலைக்குத்
துணை போவதாகவே அமையும்.

ஈழத்தமிழர் துயர் நீக்க எத்தனை அமைப்பு கட்டினாலும், எத்தனை
ஆர்ப்பாட்டங்கள் செய்தலும் எல்லாம் கொலைகாரர்கலுக்கு அவகாசம்
தருவதாகவே முடியும். தடயை நீக்கிப்பார்த்தால் தான் உண்மை நிலவரம் புரியும். கூடிக்கூடிப்பேசும் எல்லாருக்கும் கேட்கிறேன்
வெட்கமாகயில்லையா?
இது உள்நாட்டுப்பிரச்சினைத்தானே? இதைக்கேட்க முடியாமல்
என்ன செய்துவிட முடியும்? குறிப்பாக திரு.பழ.நெடுமாறன் அவர்கள்
சோனியாவை நேரில் வர்ப்புறுத்த வேண்டும். சார்க் நாடுகள் அமைப்பில்
இந்தியா இருப்பதால் அதில் அங்கம் வகிக்கும் நாடுகலுடன் சேர்ந்து
இலங்கைக்கு உதவுகிறது என்று சிலர் சொல்லலாம். அதே சார்க்
அமைப்பின் மக்களாகிய நாம் இன அழிப்பை நிறுத்தச்சொல்லும் போது
இந்தியா தடுக்கவேண்டாமா? தமிழினத்தலைவர்களே என்ன செய்யப்போகிறீர்கள்?

2 comments :

Unknown said...

பழ. நெடுமாறன், குலத்தூர் மணி, மணியரசன், விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருட்டிணன் இவர்கள் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகள் மறந்த்து தமிழ் என்ற ஒற்றை புள்ளியில் ஒன்றினையாவிடில், ஒரே மேடையில் தோண்றாவிடில் அரசியலுக்காய் தமிழ் பேசும் அசிங்கமான அரசியல்வாதிகளிடமிருந்து தமிழகத்தை காப்பாற்ற முடியாது!

Unknown said...

பழ. நெடுமாறன் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கில் தமிழகத்திலிருந்து தமிழுணர்வாளர்கள் தில்லி செல்ல வேண்டும். அங்கே பாராளுமண்றத்தின் முன் உண்னாவிரதம் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இனி எதுவும் செய்வது உதவாது. இனி தமிழுணர்வாளர்கள் தில்லி செல்வது பற்றி யோசிக்க வேண்டும்.