Tuesday, December 9, 2014



ரிசர்வ் வங்கி நிருவாகமும் மயிலாடுதுறை இராவணா ரெங்கசாமியும்.
.
.       மயிலாடுதுறை புத்தன் தேனீர்கடைஉரிமையாளர் அண்ணன் ரெங்கசாமி அவர்களின் வயது தற்போது 85 அய் தாண்டிவிட்டது பழம்பெரும் பெரியார் தொண்டர். பல பெரியாரியலாளருக்கு முன்னோடி. சமீபத்தில் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது நமது நாணயங்கள் பற்றி அவர் அங்களாய்த்தார்.
    அவரிடம் ஒரு சிறப்புண்டு. அவரது கடையில் உணவு உண்ணாத தி. க. பேச்சாளர்களே இல்லை. கூட்டங்கள், வழிநடைப் பயண்ங்கள், ஆகியவற்றின் போது வருவோர்க்கெல்லாம் அங்கேதான்  இலவச உணவு. அவரது துணைவியாரும் மனமுவந்து செய்வார். அது ஒரு கட்சி அலுவலகம்தான். பிறகுதான் கடை .அப்படி இருக்கும் நிலை. எப்போதும் மூடநம்பிக்கைக்கு மாற்றாகவும்,பகுத்தறிவுக் கருத்துக்களும் புழக்கத்தில் இருக்கும். அதிலும் அண்ணன் ரெங்கசாமி அவர்கள் வருவோர் போவோரிடமெல்லாம் கருத்துமழைப் பொழிவார். காசு கொடுத்து சாப்பிட்டவிட்டு இதனையும் கேட்டு சிரித்துக்கொண்டேபோவார்கள். நான் அவரின் பேச்சுகளை கவணித்த்தில்தான் அவரை “ராவணா ரெங்கசாமிஎன்று அழைப்பேன். யாராவது கடைக்கு  வருவோர் அவரது கடயில் மூடநம்பிக்கையுடன் எதார்த்தமாகப் பேசுவார்கள்,  அப்போது இவர் “ராவணா...ராவணாஎன்று பதிலுரைத்து ஆயாசப்படுவதுபோல் பேசுவார். வந்தவரும் விழி பிதிங்கிவிடுவார், மற்றவரும் சிரித்துவிடுவார்கள் ராமா, ராமா என்று எதெற்கெடுத்தாலும் அயர்ச்சிகொள்ளும் மக்களிடையே இவர் ராவணா, ராவணா என்று கூவும் போது ,அது ஒருவித அறிவு விளக்கமாகவும்,இராமன் ந்ம்மவன் இல்லை ராவணன் நம்மவன் என்ற எண்ணத்தியும் திராவிடத்தமிழன் நாம் ஆரியனை ஏற்காதே என்ற இயக்கப் பிரச்சாரத்தையும் அந்த நொடிப்பொழுதில் புரியவைத்துவிடுவார். அவர் ஒரு பெரியார் பிரச்சாரத்தின் ஒற்றை ராணுவம். எனவே அவ்வப்போது போய் ஒரு ராயல் சல்யூட்அடித்து தலைவரை வணஙிவிட்டு பேசிவிட்டு வருவது வழக்கம். அப்படித்தான் இந்த ரிசர்வ் வங்கி  நிருவாகம் பற்றியும் பேசினார்.
   அவர் தேநீர், உணவுக் கடை வைத்திருப்பதால் பலபேர் வருவார்கள்.  சில்லரை நாணயப் புழக்கம் அதிகம். இப்போது வெளிவந்திருக்கும் நாணய வில்லைகளில் 50காசு, ஒரு ரூபாய், 2 ரூபாய்,5ரூபாய் எல்லாம் மிக மிக கவணித்துக் கொடுத்தால்தான் சரியாக இருக்கிறது. ஏரத்தாழ எல்லாம் ஒன்று போல்தானே உள்ளன. இதில் நுகர்வோர் படும் சிரமம் அந்த ரிசர் வங்கி மேதாவிகளுக்குத்தெரியாது. ராவணா ரெங்கசாமி என்ன சொல்கிறார் என்றால், இந்தக் காசுகள் பல வடிவங்களில் முன்னர் போடப்பட்டது,. ஏனென்றால் அதன் வடிவத்தை தடவிப் பார்த்து எவ்வளவு மதிப்பு என்று கண் பழுதானவர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நியதியில்தான். இப்போதெல்லாம் வெளிவரும் நாணய வில்லைகளால் கண்தெரிபவர்களே தடுமாறவேண்டியுள்ளது. இது நியாயமா? இவர்கள் (வங்கியாளர்கள்) மெத்தப் படித்தென்ன புயன். மக்களின் பயனுக்கில்லாத கல்வி,பதவிகள் எதற்காக? இப்போதெல்லாம் மருத்துவ மனைகள் பொதுப் பயன்பாட்டு இடங்களில் முடவர்களுக்குப் பயன்பட படிகளுக்கருகில் சருக்கைகளும் இருக்கவேண்டும் என்ற நியதி கட்டாயப் படுதப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் இப்படி இவர்கள் அறியாமையாய் காசு வில்லைகள் (துட்டு) போடுவது நியாயமா? வங்கிகளின் ஏடிஎம் களிலேயே பிரைலி எழுத்துகள் சில இடங்களில் பதிண்ட்யப்பட்டுள்ளா. எனவே  வாய்ப்புள்ளவர்கள் எங்கே யாரிடம் சொல்லி இந்த சில்லரை நாணயம் அச்சிடும் வேலையை அறிவு பூர்னமாகச் செய்யச் சொல்லுங்களேன்.       
                                  இறை கற்பனை இலான், இரசீத்கான்                                                                                     

.

Saturday, August 23, 2014

தமிழ் தேசியம் பேசுவோரை சந்தேகிக்கிறோம்.

தமிழ் தேசியம் பேசுவோரை சந்தேகிக்கிறோம்.

          ஆம் புலிப்பார்வை படம் தொடர்பாக வெளிவரும் கருத்துகள் பார்க்கும்போது மிகவும் அச்சமாக உள்ளது.
பிரபாகரன் மரிக்கவில்லை என்று சொன்னதால் தமிழ் நாட்டில் புரட்சிகர உணர்வு ஏற்படாமல் தடை பட்டது என்ற எண்ணம் உண்மைதானோ என்று தோண்றுகிறது. செல்வன் பாலா வரிச்சட்டைகளில் இருந்ததாகவும் போர்முனையிலேயே சுடப்பட்டான் என்றும் அவனது பேச்சில் எந்தந்தையை உஙளால் பிடிக்கமுடியாது...என்று மீண்டும் மீண்டும் சொல்லவைத்து குழப்புவதும்,இப்படிப்பட்டவர்களுக்குகு பழ நெடுமாறன்,சீமான் ,சிங்களத்தில் கல்விப்பணி செய்து கட்டணம் வசூலிக்கும் பச்சமுத்து பாரிவேந்தன்,யாவரும் இந்திய உளவுத்துறைக்கும் சிங்கள சூழ்ச்சிக்கும் இடம் கொடுத்தவர்கள் என்று கருதி சந்தேகப்பட வேண்டியுள்ளது.

Saturday, May 11, 2013


Sunday, May 5, 2013

   ராசிவ் காந்தியின் கொலை வழக்கில்26 பேருக்கு தடலடியாக தவராக தூக்குதண்டனையை நீதிமன்றம் கொடுத்தது.
தமிழ் நாட்டின் சிறு குழுக்கள் என்று கருதும் பழ நெடுமாறன், வைகோ,வழக்கற்ஞர் மயிலாடுதுறை ராமதாசு,அவரதுஉதவியாள்ர் ஏட்டு ராசமாணிக்கம்,மனியரசன்,போன்ற தமிழ் ஆர்வள்ர்கள் மக்களிடம் பணம் வசூலித்து,வழக்கு நடத்தி 19 உயிகளை அன்றே காப்பாற்றினார்கள். இன்று மீதி மூண்று பேரை மீண்டும் தூக்கிளிட துடிக்கும் இந்திய தேசிய பைத்தியங்களே 19 பெரையும் சும்மா விட்டிருந்தால்,தூக்கில் போட அனுமதித்திருந்தால் அந்த உயிர்களை (மறைமுக விசாரணை மற்றும் அதிகார ஆதிக்கத்துடன்) தூக்கிலிட்டால் திருப்பித்தர முடியுமா? அதிகார வர்க்கமே, மக்களே வேண்டாம் மரண தண்டனை. வேண்டாம் மரண தண்டனை.

Wednesday, April 10, 2013


Thursday, September 6, 2012


      அன்னா அசாரேயின் சண்டித்தனம் தோல்வி

ஊழல்      அன்னா அசாரேயின் சண்டித்தனம் தோல்வி
 ஒழிப்பென்று சொல்லி ஒரு மசோதாவை முன்வைத்து பெரிய அளவு போராடி
ஆள் சேர்த்த்தார் அசாரே. நல்ல செய்திதான். ஊழல் அரசுகளின் வேலையை மட்டும் கெடுக்கவில்லை.
உட் புகுந்து மக்களின் வாழ்வாதாரத்தையும் கெடுக்கிறது.அதனைவேரறுக்க கூட்டம் சேர்க்கவேண்டும்.
அந்தக்கூட்டம் சரியான் பாதையில் செல்லவேண்டும். பாபா ராம் தேவ் என்பவ்ர் அதில் கலந்து கொண்டதும் அது
 காவியாக்கப்பட்டது. காவி அரசியலார் அதனைப் பயன் படுத்த ஆயத்தமாயினர். குற்றச்சாட்டுகள் ஏற்படவே
 தேசியக் கொடி அங்கே மாற்றம் கொண்டது. மசோதா நிறைவேற நாள் குறித்து உண்ணா நோன்பு
அறிவித்து பின் விட்டுவிடப்பட்டது. உண்ணா நோன்பு என்ற பதம் காந்தியாரை முன் வைத்து பிரபலப்
 படுத்தப்பட்டுள்ளது. வெள்ளைக்காரன் உண்ணாவிரததை பார்த்து சுதந்திரம் கொடுத்ததாக சொல்லிச்
சொல்லி போர் குனத்தை மழுங்கடித்துவிட்டார்கள். உலகப்போர் சூழல் ,சமாளிக்கமுடியாத பொருட் சுமை
உலகத்தின் முன் தன்னை உயர்த்திக்கொள்ளும் தேவைகளும், பலபேரின் உயிர்த்தியாகமும்,சுதந்திரம் கிட்ட  .
வழிசெய்தது. சுதந்திரத்திற்குப்பின் ஒரு நாள் உண்ணாவிரதம் அடயாளமாக இருந்தால் விடுவார்கள். நீடித்தால்
கைது செய்வார்கள். இது சட்டம். நீண்ட நாள் இருந்தும் அரசு விட்டுவிட்டது என்றால் அது  மக்களின் ஆதரவுக்கு
பயந்து நீர்த்துப்போக வைக்கிறது என்று பொருள். அதன் பின் நடவடிக்கை எடுக்கும். மூன்று முறை இதற்காகவே இருந்து
பின்வாங்கப்பட்டது. பயனற்றுப்போனது மக்கள் சக்தி. மாறாக ழலை எதிர்த்து மக்கள் சிந்தனையை வளுவாக்கி எதிர்ப்புண்ர்வைக் கொண்டுவர முயன்றிருக்க
வேண்டும். இல்லாததால்தான் தோல்வியில் முடிந்தது.உண்ணாவிரதம் இருந்து தன் கருத்து சரியோ தவரோ எதிரி ஏற்றுத்தான்
ஆகவேண்டுமென்று கட்டாயப்படுத்துவது சண்டித்தனம்ல்லவா? காந்தியார் இருந்த போதும் பெரியார் இதனை சண்டித்தனம் என்று சொன்னார். எனவே சண்டித்தனம் தோல்வியுற்றது வியப்பில்லை. மாறாக அதனை மக்கள் பிரச்சினையாக்கவேண்டும்

இறைகற்பனைஇலான்