Sunday, September 27, 2009

வெட்கப்படுங்கள் தலைவர்களே

அண்ணா நூற்றாண்டு விழா தற்போது ஊர் தெரியக்கொண்டாடப்படுகிறது. பெரியார் தி.க. தலைவர் திரு.கொளத்தூர் மணி அவர்கள் போட்டாரே ஒரு போடு. கலைஞரின் புகழ் புராணத்தில் ஒரு ஓரத்தில்தான் அண்ணா ஒட்டிக்கொண்டு தெரிகிறார் என்று பெசியதும் பேசினார் ,அண்ணா விழா களைக்கட்டத்துவங்கிவிட்டது. இல்லையானால் அண்ணா பரிதாபத்திற்குரிய நிலை அடைந்திருப்பார்.
படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ,அண்ணாவின் விழாவில் கலைஞரின் புகழைப் பாடியே யாசகப்புத்திரர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டதை நினைக்கும் போது இவர்களுக்கு வெட்கமோ ”அறிவு நாணயமோ” ஏற்ப்படவில்லை. வெட்கம் மகாவெட்கம்.
இதில் திருவாளர் வீவீவீரமணியின் நிலையோ செயலலிதா அம்மையாரை ”சேலைக்கட்டிய பெரியார்” என்று வருணித்த தன் குற்ற உணர்வை கலைஞர் பிரியர்கள், [ துணை ] முதல்வர்கள் கண்டுகொள்ளவேண்டாமே என்று மிகப்பெரிய ஜிங் ஜாங் வெட்கமில்லாமல். போடுவது வேதனை அளிக்கிறது
.
இதில் வேடிக்கை என்ன வென்றால் கலைஞர் அண்ணாவிருது பெற எத்தனைத்தகுதி உள்ளவர் என்று எடுத்துக்காட்டப் பட்டிமன்றம் வேறு நடத்தப்படுகிறது.
இது எதைக்காட்டுகிறது என்றால்கலைஞருக்கு தகுதி உள்ளதா என்ற அய்யம் வந்ததினால் அதனை ஈடுகட்ட வேண்டியுள்ளது என இவர்கள் ஒப்புக்கொள்வதாகவே இது உள்ளது. வீரமணிக்கு பெரியார் விருது. பெரியாரின்
எழுத்தும் பேச்சும் வெளிவருவதை தடுத்து தன்னை கீழ்மைப்படுத்திக்கொண்ட
இவருக்கு விருது வழங்குவது யார் என்றுப் பார்த்தால் இது தம் முதுகை தாமே தட்டிக்கொள்ளும் தற்புகழ்சியின் வெளிப்பாடுதான் இது. ஆனால்
ஒரு உண்மை சரியாக உள்ளது.அதாவது அண்ணா பெரியாருக்குத் துரோகம்
செய்துஇயக்கத்திலிருந்து வெளியேறி, தமிழகத்தின் நல்ல வளர்ச்சியைத் தடுத்துவிட்டார். இதனால்தான் அண்ணா வழிவந்து அவரையே அமுக்கி துரோகம் செய்து லச்ஜை இல்லாமல் குடும்ப த்தலவராக மட்டுமே இருக்கிறார். தமிழர்க்கு கொலைஞராக ஆகிவிட்டார். இரத்தக்கறை படிந்த தமிழ் மாநாடுநடத்துகிறார். இதுதான் மிகமிகப்
பெரிய எதிர் புரட்சியாகும். அதாவது இனத்துரோகமாகும். இவர்கள் இதற்கு
வெட்கப்படவேண்டும்.

Saturday, September 12, 2009

சிங்கப்பூர் கோயில் சிலைகள் ஆர்டர்

சிங்கப்பூர் கோயில் சிலைகள் ஆர்டர்.

ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து கோயிலுக்குத்தேவையான கடவுளர் சிலைகள் ஆர்டர் கொடுக்க வங்திருந்தார்கள்.ஒருவர் எனது அலுவலகத்தில் மாட்டியிருந்த பெரியார்,அம்பேத்கார் படங்களைப் பார்த்துவிட்டு இதற்க்கு ஏன் கடவுள் உற்பத்தி மையம் என்ரு பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்டனர். நான் கடவுள் தானே உற்பத்தி செய்கிறேன் என்று கேட்டேன். கடவுள் இல்லை என்று சொல்லும் நீங்களேன் கடவுள் சிலைகளை ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்.
நீங்கள்தான் கடவுள் உண்டு என்று சொல்கிரீர்களே ஏன் சிங்கையிலிருந்து இங்கு வந்து ஆர்டர் கொடுக்கிரீர்கள்? அங்கேயே செய்யலாமே? என்றேன்.
அவர் எங்களுக்கு சிலை செய்யத்தெரியாதே என்றார். அதற்கு நான், நீங்கள் கற்றுக்கொண்ட தொழிலை நீங்கள் செய்கிறீர்கள், நான் கற்றுக்கொண்ட தொழிலை நான் செய்கிறேன், வருபவர்கள் பக்தியுடன் வருவதால் வருமானமும் உழைப்பைவிட அதிகமாகவே கிடைக்கிறது.அதைக்கொண்டுதான் என்னிடம் பயிலும் மானவர்களுக்கு இலவச பயிற்சியும் பல உதவிகளையும் செய்யமுடிகிறது. வாழ்க்கைக்கு பலவும் தேவைப்படுகிறது.எனக்கு சாமிசிலைகள் செய்ய ம்ட்டுமே தெரியும். உங்களுக்கு கும்பிட மட்டுமே தெரியும். மேலும் , நான் கடவுள் சிலையானாலும் ,கழுதை சிலையானாலும் கிலோ ஒன்றிற்கு ரூ .1500/= தான் வாங்குகிறேன்.
கடவுளுக்கு ஒரு விலையோ கழுதைக்கு ஒரு விலையோ கிடையாது.
மேலும் கழுதை, நாய்,பன்றி, கடவுள் எல்லாவற்றிற்கும் ஒரே தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்படும். கருவிகளும் ஒன்றேதான்.என்னைப் பொருத்தவரை நீங்கள் கேட்டபடி ஒரு உருவத்தை செய்து கொடுக்கிறேன். நீங்கள் தான் அதை பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகிறீர்கள். ஒரு சிலையின் கய்யில் வேலைக்கொடுத்தால் முருகன் என்கிறீர்கள், அதே சிலையில் வேலைப் பிடுங்கி வில்லைக்கொடுத்தால் ராமன் எங்கிறீர்கள். சங்கு சக்கரம் கொடுத்தால் பெருமாள் என்கிறீர்கள். அதையும் எடுத்துவிட்டு மான் ,மழு கொடுத்தால் சிவன் என்கிறீர்கள். ஒரு புல்லாங்குழல் கொடுத்தாள் கிருஷ்ணன் என்கிறீர்கள். ஆகவே ஆயுதங்களை வைத்துத்தான் அடையாளம் காண்கிறீர்கள்.
நான் செய்வதெல்லாம் ஒரு ஆண் உருவம்,ஒரு பெண் உருவம்
ஆயுதங்களை மாற்றி வய்த்துக்கொண்டால் எந்தக்கடவுளாகவும்
ஆக்கிவிடலாம்.பெண் சிலையை எந்த ஆண் சிலையிடம் வைக்கிறோமோ உடனே அது அவனுடைய மனைவி ஆகிவிடுகிறது, என்று விளக்கிக்காட்டினேன்.
அதற்கு அவர் நீங்கள் செய்யும் சிலைகளில் எந்த சக்தியும் கிடையாது. எங்கள் ஊர் அர்ச்சகர் ஒரு யந்திர தகட்டை நீங்கள் செய்யும் சிலையின் அடியில் பதிக்கவேண்டும் என்று சொல்லி ஒரு தகட்டைக் காண்பித்தார். அதில் புரியாத மொழியில் கிருக்கி இருந்தது. நான் இந்த தகட்டில்தான் சக்தியுள்ளதே அதை வைத்து கும்பிடவேண்டியதுதானே,ஏன் தேவையில்லாமல் சக்தியற்ற சில்சியைச் செய்கிறீர்கள்?என்று கேட்டேன். ஆமாம் நீங்கள் சொல்வதும் உண்மைதானே என்றார்கள். சக்தியுள்ள தகடு இருக்கும் போது ஏன் சிலையைச்செய்யச் சொன்னார்கள் என்று என்னிடமே
கேட்டார்கள்.
அய்யா,இந்த சிலையை வைத்துத்தான் அவர்கள் தேர் தெப்பம்,சந்தனக்காப்பு, அபிசேகம் கடவுளுக்கே ஆண்டுதோரும் திருமணம் என்று எதய்யாவது சொல்லி உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியும்.யந்திர தகட்டை வைத்து இதையெல்லாம் செய்தால் யார் வேடிக்கை பார்ப்பார்கள்? எதையாவது சொல்லி திராவிடர்களிடம் உள்ள செல்வத்தையும் ,அறிவையும் கொள்ளையடிப்பதுதான் ஆரியர்களின் அன்றாட வேலை நீங்கள் கேட்டதினால் இவ்வளவும் சொல்கிறேன், என்று சொன்னேன்.
சிற்பி இராசன். – நூல் நாம் அறிந்தவைதான்; ஆனால்,நாம் சிந்திக்காதவை. கீதாலயனின் நினைவுகள் சட்டக் கல்வி மையம் வெளியீடு.72,பக்தபுரித் தெரு, கும்பக்கோணம். தொ.பே.0435 2402857.

Wednesday, May 20, 2009

மு.க. வின் வழ,வழ,கொழ,கொழ…ஒரு கருணாநிதித்தனம்

மு.க. வின் வழ,வழ,கொழ,கொழ…ஒரு கருணாநிதித்தனம்

பெரியாரிடம் ஒருவர் கேட்டார் நகர்களீன் பெயர்களை [ரஸ்யா] குழந்தைகளுக்கு சூட்டுகிறீர்களே இது சரியா ?என்று,
பெரியார் நிங்கள் பழநி என்று நகர்களீன் பெயர் வைக்கிறீர்களே ? என்று பதிலளித்தார். இதில் பதில் தெளிவாக உள்ளது கேட்டவர் வெட்கித்தலைகுனிந்தார்.

அண்ணாவிடம்[முதல்வர்] சட்டமன்றத்தில் திரு.கருத்திருமன் கேட்டார் “உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன” என்று. அண்ணா பதிலளித்தார் “எங்கள் காலடிகள் அளந்து வைக்கப்படுகின்றன” என்று. அறிவும்,துணிவும் அதில் தெரிந்த்தது.

இன்றய முதல்வர் மெற்காணும் தலைவர்களின் வழிவந்தவர்[?] என்று சொல்லிக்கொல்லும் முக அவர்கள் ஒரு
பேட்டியில்[தில்லியில்] பததிலளீக்கிறார் எப்படிப்பாருங்கள்.
கேள்வி: அமைச்சரவையில் 7 அமைச்சர்களுக்கு வாய்ப்பு உள்ளத ?

பதில்: கிடைத்தப்பிறகுதான் வாய்ப்பு இருந்ததா இல்லையா என்று சொல்லமுடியும். [இது யாருக்குத்தான் .தெரியாது]
. .தெரியாது ]

கேள்வி: பிரபாகரன் மரணம் குறித்து பிரதமர் சொன்னாரா ?

பதில்: …………[ முக ப்திலேதும் அளிக்கவில்லை ]என்ராலும் “பிரதமரிடமும் சோனியாவிடமும் இலங்கைத் மிழர்
பிரச்சினையில் அக்கரைச்செழுத்தி போரினால் பாதிக்கப்டோர் பாதுகாப்பு துயர் துடைப்பு குறித்து அழுத்தம் கொடுப்போம்.
.
நேரிடை பதில் இல்லை.

கேள்வி: இலங்கைத்தமிழர்க்கு சம உரிமை என்பதில் ராசபக்சே வை நம்பலாமா?.

ப்தில்: பிரதமரும் சோனியாவும் கோரியுள்ளார்கள். மீண்டும் நினைவூட்டுவோம். [நேரிடை ப்தில் இல்லை ]

இன்னும் எல்லாக்கேள்விகளுக்கும் வழ வழா தான்… இது பதவிக்கும் அவரை ஆகா ஒகோ என்று துதிப்பவர்களின் சொல்படி இவர் திறமைசாளி என்பதற்கும் எதுவும் பொருந்தவில்லையே?.

இவரது அரசியல் சான்க்கியத்தனத்தாள் வெற்றி கிடைத்தது என்ப்து உண்மையாணால் 40க்கு 40 ஏன் கிடைக்கவில்லை?

அது மட்டுமல்ல துரு எம் .ஜி .ஆர் உயிருடன் இருக்கும் வரை முதல்வராக இவர் வரமுடியவில்லையே ? இது என்னத்த்ற்மை?

இனி த.நா . வின் “ ஒட்டுக்காங்கிரசின் ” தலைவராக மட்டுமே இவர் வாழமுடியும் போல உள்ளது.

Wednesday, April 1, 2009

ஈழம்-சொனியா-கலைஞருக்குக் கடிதம்.

4/1/2009. காங்கிரசு தலைவர் சோனியாஅவர்கள் இன்று தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்று
எழுதியுள்ளார். ஈழத்தமிழர்களுக்குப் பரிந்து எழுதியுள்ளார் என செய்தி வந்துள்ளது.இந்த செய்தி
அவரின் அறிக்கையாக வரவில்லை. அப்படிவந்தால்தான் அது வேலை செய்யத் தகுதியுள்ள அறிக்கையாகும். ஈழத்தமிழர்களுக்கு சமஉரிமையுள்ள அதிகாரப்பகிர்வு அளிக்க விரும்புவதாகவும்,
பென்கள், குழந்தைகள் கொல்லப்படுவது வேதனை அளிக்கிறது என்றும் கூரியுள்ளார். தமிழர்கள்
கொல்ல்ப்படுவது என்று சொல்லவில்லை. ஆண்கள்,இளையோர்-முதியோர் யாவரும் கொல்லப்படுவது
சரி என்கிறாரா? அது மட்டுமல்ல உடனே மு.க பாருங்கள் “சொக்கத்தங்கம்” சோனியா சொல்லிவிட்டார் தமிழினமே உயிபெற்றுவந்துவிட்டது என்று கூச்சலிடுவார் என்று அவருக்குத் தெரியும். முக வின் ஆழம் அவ்வளவுதான் என்றும் தெரியும். அது சரி இந்தச்செய்தியை சோனியா
யாருக்கு எழுத வேண்டும். கொலைவெறியன் ராசபக்சேக்கு அல்லது அய்க்கியநாடுகள் அவக்கு அல்லவா எழுத வேண்டும்? மு.க வுக்கு எழுதுவது எதற்கு? ஏமாற்றத்தானே? இதற்கெல்லாம் தமிழர்கள்
ஏமார்ந்துவிடுவார்கள் என்று அவருக்குத்தெரியுமா? அல்லது நானேஏமாற்றிக்கொள்கிரேன் என்று
வழிகிறார்களா?இது முதலைக்கண்ணீர் என்பது யாருக்குத்தான் தெரியாது. ஓட்டு வாங்கச் செய்யும்
நடிப்புத்தானே? அது போகட்டும் அங்கே மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்போகிறார்களாம்.
அதாவது மக்களின் சொந்த பூமியிலிருந்து விரட்டப்போகிறார்கள் என்பதுதானே இதன் பொருள்.மேலும்
அம்மக்களை திறந்த வெளிச் சிறைச்சாலையில் வைப்பது போலல்லவா ஆகும். அங்கே ராசபக்சே குண்டு போடமாட்டான் என்பதற்கு என்ன முகாந்திரம். போர் நிறுத்தம் வேண்டும் என்று உலகமே
கேட்கிறது. போர் நிறுத்தத்தில் எண்ணம் இருந்தால் ம்க்களை வெளியேற்ற என்ன அவசியம். ஓகோ
மு.க கேட்கவில்லை என்பதினாலா? என்ன விசித்திரமான தேசியத்தலைவர், என்ன விசித்திரமான
தமிழினத்தலைவர்,முத்தமிழ் வித்தகர், மூவேந்தர் வாரிசு கொடுமையட கொடுமை.
இன்னொறு செய்தி.திரிகோணமலையில் அமெரிக்கா படைத்தளம் வைக்கப்பார்க்கிறது. இது இந்தியாவிற்கு ஆகாது என்றுதான் ராஜிவ் காலத்தில் இலங்கைக்குப் படை சென்றது என்பதாகப்பேசப்பட்டது. இன்று மக்களைத் தானாகப் போகச் சொன்னால் போகமாட்டர்கள் என்பதால்
போர் நடத்தி பலரைக்கொன்று அந்த இடத்தைச் சுடுகாடாக்கி காலி செய்துவிட்டார்கள். இப்போது
அமெரிக்க அலுவலர்கள் திரிகோணமலையை பார்வையிட்டுப் போயுள்ளார்கள் என்ற செய்தி பரவலாகப்
பேசப்பட்டுவருகிறது. அப்படியானால் இந்தியாவின் நிலை அதோகதிதானா? உண்மை அதுவல்ல
ராஜிவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வாங்கித்தர இத்தாலியிலிருந்து யாரோ முயல்வதாக
அன்றைய செய்தித்தாள்களில் செய்தி வந்ததாக நினைவு. காசுமீர் பிரச்சனை, பஞ்சாப் பிரச்சினைகளைத் தீர்த்தாரென்றும், இலங்கைப் பிரச்சினை தீர்த்தார் என்றும் புகழ் பாடி பரிசு வாங்க முயன்றதாகத்தகவல். ஆனால் எதுவும் முடியவில்லை. ஏன் என்றால் றோ நிருவனம் போட்டுக்கொடுத்தப் பாதை இப்படியாகிவிட்டது. எம். ஜி. ஆர். உயிரோடு இருந்தால் எப்படி தேர்தலைச் சந்திப்பது, மறைந்துவிட்டால் எப்படி சந்திப்பது என்று “புளூ புக் “ என்ற
திட்டத்தைப் போட்டுக்கொடுத்தார்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் . அமைப்பின் தோழர்கள் அன்று
குடந்தைப்பகுதியில் பேசிக்கொண்டார்கள். அதனால் தானோ என்னவோ ராஜிவ் சாலையில்
இறங்கி சாதாரன எழிய மக்கள் மத்தியில் இறங்கி வந்தார் அதாவது எம்.ஜி.ஆர். போல. ஆனால்
இழப்பு ராஜிவுக்கு .இலாபம் றோ அதிகாரிகளுக்கு. எவ்வளவு திண்றிருப்பார்கள் திட்டமிட்டதற்க்காக?
ஆனால் சோனியா அவர்களே, மு.க. அவர்களே தமிழர்களைக் காப்பதாக நடிக்காதீர்கள்.
“ தன்நெஞ்சறியப் பொய்யற்க பொய்த்தப்பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்”. இது திருவள்ளுவர் சொன்னது. நிச்சயம் சுடும். தமிழர்களே ஓட்டுச்சீட்டு ஒரு நல்ல வாய்ப்பு . தவறி விடாதீர்கள். நடுநிலை வகிப்பது என்பது எதிரிக்குத் துணை போவது[பெரியார்]ஆகும். எனவே யார் வரக்கூடாது
என்று முடிவெடுத்து ராசபக்சேக்கு உதவியவர்கலையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களயும்
அதாவது காங்கிரசு, “ஒட்டுக்கங்கிரசு” களையும் தோற்கடிக்கச்செய்யுங்கள். செய்யுங்கள்.

Wednesday, March 11, 2009

தமிழ் ஆர்வலர்களே சேதி தெரியுமா?

தமிழ் ஆர்வளர்களே தெரியுமா உங்களுக்கு

இந்திய அரசின் ஆட்சிமொழியாக அதாவது அலுவல் மொழியாக இந்தி,
ஆங்கிலம்,தமிழ் முதலாக ப்தினெட்டு மொழிகள் இருந்தன. பின்னர் இது
இருபத்திஇரண்டு மொழியாக ஆக்கப்பட்டது.ஆனால் இன்று இந்திய
அரசின் விபரங்கள் அடங்கிய இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கிலம்
ஆகிய இரண்டுமொழிகள் ம்ட்டுமே அலுவல் மொழியாக மாற்ற்ப்பட்டுள்ளது.
இது எப்படி மாறியுது?. எப்போது அரசு ஆணையிட்டது. இந்த மாற்றம்
ஏற்பட்டதினை அரசியல் கட்சிகள்,மற்றதமிழ்க்குழுக்கள் ஆதரிக்கின்றவா?
ஓசைப்படாமல் இது நடைபெற யார் காரணம் . இன்று தமிழீழத்தில் நடப்பதும்
இப்படி தமிழ்ழொழியழிப்பு நடவடிக்கைக்குப் பிறகுதானே?இன அழிப்பிற்கான
துவக்கமே மொழி அழிப்பிலிருந்துதானே? இந்திய அரசு நாளை தன் துப்பாக்கியை
தமிழர் பக்கம் திருப்பவும் கலைஞர்பேரன் முதல் ஜே கூட்டம் ஈராக அனைவரையும்
சட்டப்பூச்சாண்டிகாட்டி அடிமைப்படுத்த அழிக்க வாய்ப்பாக இது ஆகாதா? தமிழர்தலவேர்களே
என்னசெய்யப்போகிறார்கள்?

Sunday, February 15, 2009

இலங்கையில் இனியும் தமிழர் சேர்ந்துவாழ முடியுமா?

இலங்கையில் இனியும் தமிழர் சேர்ந்துவாழ முடியுமா?

ஈழம் பண்டயக்காலத்தில் பல ஆக்கிரமிப்பாளர்களால் தொல்லைப்பட்டது. அது அப்படியே இருக்கட்டும்.
கண்காணும் காலத்தில் ஈழத்தில் தமிழ் மொழி சிங்களவர்கலால் தடுக்கப்பட்டு சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று
ஆகி கல்வியில் தமிழர் புறக்கனிக்கப்பட்டு,மலையகத்தமிழர் குடியுரிமை மறுக்கப்பட்டு, ஒட்டுமொத்த தமிழினமே இரண்டாந்திர குடிமக்களாக ஆனதன் பின் கல்வியில்,பொதுநலச்சிந்த்னையில்,மானுடயியலில் தேர்ந்த தந்தை
செல்வா முதலானோர் பாடுபட்டு,பயனற்றுப்போனதன் பின் ,இனி தாளாது என்று ஆய்ந்து முடிவெடுத்து அறப்போராட்டங்கள்,மாநாடுகள்,பொதுகூட்டங்கள்,ஊர்வளங்கள்,வின்னப்பங்கள் பல செய்தும் பயனற்றுப்போகவே
இனி பிரிந்து வழ்வது என அனைத்து தமிழ் மக்கள் விரும்பி முடிவெடுத்துப் பணியாற்றிய போது, மாநாடுகனில்
காவல்துறையைக்கொண்டு அடித்து சின்னாபின்ன்மாக்கியதோடு பல அறிஞர்கனின் உயிரையும் மாய்த்து தமிழ்
மக்கள் வழ்வில் துயரத்தை வளுக்கட்டயமாக சிங்கள அரசு திணித்ததைக் கண்ட ப் பின்னும்………
அறவழியில் உண்ணாநோண்பிருந்த மாணவிகளை ராணுவசிப்பய்கள் தூக்கிச்சென்றதை அனுபவித்த துயரை
அறிந்தப்பின்னும்……..

அதனை எதிற்கும் முகமாக இளைஞர்கள் ஒன்றுகூடி செயலாற்றும்போது அவர்களை ராணுவம் வீதிகளில்
அலைந்து வேட்டயாயியதை அறிந்தப்பின்னும்…….

கற்றறிந்த பலர் கூடி சனநாயக வழியில் பத்திக்கைகள் நடத்தியதை பொறுக்காமல் பதிரிக்கை அலுவலகங்களை
எரித்து நாசமாக்கி பலரைக் கொன்று குவித்தப் பின்னும்……..

உலகிலேயே மிக உயர்ந்த இரண்டாம் நிலையில் பொளிவோடு திகழ்ந்த அறிவுக்களஞ்ஞியமாம் யாழ்ப்பாண நூலகத்தைக்கூட எரித்து தமிழரின் அறிவுச்சுரங்கத்தைய்ம் அடயாளத்தையும் அழித்தப் பின்னும்……

அதை ஒட்டிக் கலகம் செய்து அடங்கி வாழ் அல்லது செத்துப்போ என்று கோரத்தாண்டவம் ஆடிய சிங்களரும் சிங்கள சிப்பாய்களும் ஆடியப் பின்னும்……

தம் ரத்த உறவுகள் சிதைக்கப்படுவதைப் பார்த்து சும்மா இருக்க முடியாமல் அன்றய நிலையில் ஒரு இருநூறு பேர்
சேர்ந்து ஆய்தம் ஏந்தினால்தான் மக்கலையும் மானத்தையும் காப்பற்றமுடியும் என்று முயன்ற போது ஆறு விதக்குழுக்களுக்கு பயிற்சியும் ஆய்தமும் இந்தியா கொடுத்து அதனால் அவ்வின இளைஞர்களை குறிப்பாக
விடுதலைப்புலிகலை, கொடுங்கோள் பயிற்சி பெற்று அவர்தம் குடும்பத்திற்காக கவலைப்படவேண்டாத கொலைவெறி
ஏற்றப்பட்ட இசுரேலிய “மொசாத்” கூலிப்படை கொண்டு அழிக்க சிங்கள அரசு முயன்றதற்குப் பின்னும்…..

அய்.நா அவையில் 70வதுகளில் இலங்கை அமைச்சர் பேச அழைக்கப்பட்ட போது ஒரு தமிழக் கல்விப்
பேரளர் மேடையேறி எம் தமிழினம் அழித்தொழிக்கப்படுகிறது உலக நாடுகளே கேளுங்கள் என்று கதறிக்
கைதானப் பின்னும் இன அழிப்பு நடைபெரறுவதைப் பர்த்தப் பின்னும்…….

சிங்களமே ஆட்சிமொழி என அறிவித்து இலங்கா என்று இருந்ததை சிரீ லங்கா என்று மாற்றி சிரீ என்ற ஒற்றை
எழுத்தை வீடுகளிலிலெல்லாம் எழுத்ச்சொல்லி தமிழர் நெற்றீயிலும் , சட்டைகளிலும் , சட்டையைக்கழற்றீ ஆண்கலுக்கு
முதுகிலும், பெண்கலுக்கு சட்டையைக் க்ழட்டி மார்பிலும் அடப்பாவிகளே மார்பை அறஉத்து சிரீ எழுத்தை அச்சுக் குத்தியதை கண்ட பின்னும்…..
தொடர்வ்ண்டியில் போவோரை எல்லாம் இழுத்து சிரீ குத்தி ஆடைகள் களைத்த்தைய்ம் அவிழ்த்து விட்டு மலார்
குச்சிகளால் முதுகில் அடித்து ஓடச்செய்து தமிழன் முதுகுக் காட்டி ஓடுகிறான் என்று அரக்கத்தனமாக ஊலை
விட்டு மகிழ்சிக்கூத்தாடிய பின்னும்……..

அந்தத் தொடர் வண்டியில் பயணம் செய்த புதுமணத்தம்பதிகளை ஆடை அவிழ்த்து விட்டதால் வெட்கத்தாலும் அவமானத்தாலும்
அவர்கள் குப்புறப்படுத்துவிடவே குச்சிகளால் அடித்து எழவைத்து ஓடஓட விரட்டிய அவலத்திற்க்ப் பின்னும்……..

தாம் பெற்ற பெண்டுகளை அறிவும் ஆற்றலும் பெற கல்விச்சாலைக்கு ஆசையாய் அனுப்பும் போது அவர்கள் பசியாற
டப்பாக்களில் உணவுக்குப்பதிலாக கைத்துப்பக்கியும் [துப்பக்கி வைத்திருக்க தகுதி வய்ந்தக்குடும்பம்] விஷப்புட்டியும்
போட்டுக்கொடுத்து அனுப்பி , ஆமிக்காரன் [சிங்கள சிப்பாய்] உன்னை த் தொல்லை செய்தால் சுட்டுவிடு முடியாமல் வன் புணர்சி செய்தஉவிட்டால் அந்த விந்துடன் வாராதே விடம் அருந்தி மாண்டுவிடு என்று பெற்றோரே சொல்லி தினம் தினம்
அழுது அழுது படிக்க அனுப்பிய பின்னும்…….

போராளிகளின் ஒரு குழுனினரான குட்டிமணி,ஜெகன் ஆகியோர் வெளீக்கடை சித்திரவதை முகாம் சிரைச்சாலையில்,
அதன் முன் அவர்கள்” நாஙள் இறந்தால் எங்கள் கண்களை யாருக்காவது போரறுத்துங்கள் அதன் வழியாக மலர்ந்த
தமிழீழத்தக் கணுவோம்” என்று சொல்லியிருந்தார்கள் என்பதற்காக் அவர்களின் கண்களைப் பிடுங்கி பூட்சுக் காளால்
மிதித்து நசுக்கி தண்ணீராக்கிய சிங்கள ராணுவ அட்டூழியம் அறிந்த பின்னும்…..

போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை என்று சொல்லி இந்திய ராணுவம் உள் நுழைந்தபோது நமது நாட்டின் சுதந்திரம்
வேறொரு நாட்டினால் முடிவு செய்யும் நிலை ஏற்ப்ட்டுவிட்டது எனவே நம் ம்க்களின் , போராளிகளின் பாதுகாப்பை
இந்திய அரசிடம் ஒப்புவித்து ஆய்தங்களை கீழே வைக்கிறோம் என்று தமிழ் ஈழதலைவன் பிரபாகரன் கூறியப்பின்
வானூர்தியிலிருந்து போராளீகலுக்கு யாரும் உணவோ உதவியோ செய்யக்கோடாது என்று துண்டறிக்கை விசிறியபோது
அதைக்கண்ட மக்கள் எம் பிள்ளைகளுக்கு சோறு போடாதே என்று சொல்ல இவ்ன் யார்? என்று அங்கலாய்த்தப் பின்னும்..

கலவரக்கால்ங்களில் தப்பி வர எத்தனித்த தமிழர்களில் ஈழ்த்தமிழர்களை மட்டும் தனியே இழுத்துப் போட்டு
வெட்டரிவாளால் வயிற்றை வெட்டி சரிந்த குடலுடன் பெற்றோல் ஊற்றிக்கொழுத்தியதைக் கண்டு வேலைக்குப்போன
ப்ட்டுக்கோட்டைத் தமிழன் ஒருவன் ஒரு மாதம் வாய் பேசமுடியாமல் அதிற்சியடைந்தான் என்று அறிந்தப் பின்னும்……

ராணூவப்படைகளின் டாங்கிகள் முச்சந்திகளில் போனால் கன்னிவெடி இருக்கும் என்ரு அஞ்சி அருகாமை
வீட்டு வரிசைகளீன் மீது நர நர என்று வீடுகளை நொறுக்கியவண்ணம் போய் நாசம் செய்ததைக் கண்ட பின்னும்……

இந்திய சிப்பய்கள் திரும்பும் போது தனியாக ஒரு வழியை விமானதளத்தில் ஏற்பாடு செய்ய வேண்டிய அளவு
ஈழத்தமிழர் வீட்டு மின்னியல் சாதனங்களை தூக்கி வந்ததைப் பார்த்தப் பின்னும்……

செம்மணிபுதைகுழிகளில் குழந்தைகளின் குப்பைகளை இந்த உலகம் பார்த்தப் பின்னும்……

பாதுகாப்புப்ப்குதி என அறிவித்தப் பகுதிகளில் உயிரைக் காக்க வந்த ஆதிளிகளை சுட்டுப்பொசுக்கியப் பின்னும்….

அதனை புலிகள் செய்தார்கள் என்று ராணுவம் கூறியது பொய் என்று அறிந்தப் பின்னும்……

ம்ருத்துவமனைகளில் கொத்துகுண்டுகள் போட்டு தமிழர்களை அழித்தப் பின்னும் …….

இவையும் எமது குண்டுபோட்டு தாக்கும் இலக்குகள்தாம் என்று ராணுவம் சொல்லிய பின்னும்…..

தமிழகத்தலைவர்களே, மார்க்சிஸ்ட்டுகளே, இந்திய அரசின் அதிகாரிகளே, இந்துராம்களே, சோகளே,

இதற்க்குப்பின்னும் ஒரே இலங்கை இல்ங்கை என்று வாழவெண்டும் என்கிரீர்களே இது நியாயமா, முடியுமா?

மனிதநேய ஈரச்சிந்தனையுடன் சொல்லுங்கள். முடியாது. தனித்தனி அரசாக எல்லை குறித்து வடக்கு,கிழக்கு

இணைந்து வாழவிடுவதே இந்த இன அழித்தொழித்தளின் முடிவாக இருக்கமுடியும். இது நிச்சயம்.

Saturday, February 14, 2009

தமிழீழ ஆதரவு உத்திபிரியவா?

அழித்தொழிப்பு நடவடிக்கையில் இலங்கையும் அதில் தன்னை இனைத்துக்கொண்டு எதார்த்தமாக இருப்பதாய் நடிக்கும் இந்தியாவும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இயங்கும் நேரம் இது.
தமிழ்நாட்டுத் தலைவர்கள் யாவரும் அடுத்த தேர்தலுக்காக் உத்தி பிரியும் வேலையிலேயே இருப்பது இனத்துரோகம் ஆகும்.
காங்கிரசுக்கு எப்போதும் ஒரே நிலைதான்.மத்தியில் ஆட்சிக்கு பா.உருப்பினர்
இடங்கள் வேண்டும் அவ்வளவே.அதற்காக அரசியல் இலாபம் யாருக்கும் தரத்தயார். கங்கிரசுக்கு சிலர் தேவை. அதில் உறுப்பினர் ஆக ஒரேஒரு தகுதிப்
போதும். அதாவது, தமிழ்ர் விரோதப்போக்கும், துரோகம் செய்யும் துணிவும்
இருக்கவேண்டும். அதனால் நான், நீ என்று கதர்கள் கூத்தாடும். அதநால்தான்
இப்போது தமிழக துரோகிகளுக்கு அகிலிந்திய பதவிகள் காத்திருக்கிண்றன.
துணைக்கங்கிரசாக உறுமாரியுள்ள தி.மு.கஒருப்க்கம்,அதில் விஜயகாந்தை
சேர்க்க வியூகம். பமக வை ஒதுக்கி,அத்துடன் வி.சி யையும் ஒதுக்கி வைத்தல். இதன் மோல்ம் பா.மன்ற இடங்களை கோடுதலாகப் பெற்று பின்னர்
தி.மு.க. வை ஓரம் கட்டிக்கொள்ளலாம் என்ற எண்ணம். மறூ புறம் எப்போது
வேண்டுமானாலும் காங்கிரசுடன் சேர ஆயத்தமாக புலிஎதிற்பு கோஷம் போயும் அ.தி.மு.க. கம்யூக்கள் கருவேப்பிள்ளைகள் எப்போதும் சில இடங்களுக்காக நிலை மாற்றும் நிலையிலேயே இருத்தல். மதிமுக தத்திப்-
பிழைக்கும் நிலை. தமிழகத்தில் ஈழ ப் ப்ரச்சினையை சரியாகக் கையில் எடுத்ததே இழ்ப்பை சரிகட்டவே.என்றாலும் வலதுகளிடம் கொங்சம் நேர்மை உள்ளது.ஆனால் தோழமையோ ஈழ் எதிர் நிலை எடுக்கும் அதிமுக வுடன்.
பிஜேபியோ கேட்கவே வேண்டாம் தமிழ் தமிழர் சிந்தனைக்கு எதிரானது.அதற்கு சோவின் சான்றுகளே உதாரணம். இவர்களும் பாமக வுடன்
கோட்டு கிடைத்தால் போதும் என்ற நிலை. இவ்வளவுக்கும் இடையில்
மக்கள் பெரிதும் வீதிக்கு வந்து போராடி தமிழீழ உயிகளைக் காக்கத்தவிக்கிறார்கள். ஆனாலும் தேர்தல் பூதம் அச்சுருத்திக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஈழம் அமைதிப்பெரவேண்டுமானால் சர்வதேசியம் முன்
வர வேண்டும் அதற்க்கு சோனியா, கங்கிரசு இல்லாத நிலை ம்திதியில் வரவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் விடுதலை தமிழ் நாட்டிற்கும் தமிழ் இனதிற்கு வேண்டும். முறையாக யார் இதனை முன்நெடுப்பார்கள். இன உணர்வாளர்கள் ஒன்றிணைய வேண்டும். அது எப்போது?.

Wednesday, February 11, 2009

பக்கவாத்தியம் வாங்கலையோ

Wednesday, February 04, 2009 வாங்க பக்கவாத்தியம் வாங்க பக்கவாத்தியம்
வாங்க பக்கவாத்தியம் வாங்க பக்கவாத்தியம் வாங்க பக்கவாத்தியம் பக்கவாத்தியம் லையோ பக்கவாத்தியம்…..

பக்கவாத்தியம் தேவைப்படுவோர் குறிப்பாக பொதுவாழ்க்கையில் தேவைப்படுவோர்
கவனிக்கவும் குறைந்த செலவில் ஆர்ப்பாட்டமாக பகுத்தறிவுப்பகலவன் பெரியார்
சிந்தனைகளைக்கொண்ட கோட்டத்துடன் பக்கவாத்தியம் செய்யப்படும் . அரசாங்கமேடை
என்றால் எலவயமாகவும் செய்யப்படும். தேவையானவர்கள் அனுகவேண்டுவோர் வேப்பேரி
பெரியார் சாலையில் பெரியாரின் முத்திரைத்தாள் சுமைதாங்கிகள் ஆயத்தமாக இருப்பார்கள்.
[குறிப்பு: ஈழப்பிரச்சினையில் தோழர் வீரமணி அவர்கள் நடவடிக்க்கையை நினைத்துக்கொண்டால்
நான் பொறுப்பல்ல.]

Tuesday, February 3, 2009

தமிழர் என ஒரு இனம்

தமிழர் என ஒரு இனம் உண்டு அதற்கு தனித்தனி உள்ளகுணதால் தாழ்வுண்டு என்பதை நிரூபித்துக்கொண்டுள்ள தமிழத்தலைவர்களே,
அழிவதற்கு முன் நடவடிக்கை எடுங்கள். பாவலரேறு பெருஞ்சித்திரனார்
கூரியதுபோல தமிழ் இனத்திற்கு நீங்க்ள் உழைத்தது குரைவு ஆனால் அனுப்விப்பதோ மிகமிக அதிகம். வரலாறு உங்கள் வீட்டின் எழுத்த்ல்ல
அது உங்கள் பதிவுகளோடு முடிந்துவிடுவதல்ல. விடுதலைப்புலிகள் வேறு
யாறும்ல்ல நீங்கள் சொல்கிறீர்களே அப்பாவித்தமிழர்கலென்று அவர்களின்
பிள்ளைகள்தன் என உணருங்கள். தமிழீழம் அழிவது தில்லியால் என்றால்
உடனே பாராளும்ன்றுறுப்பினர்கள் ப்தவி விளகுங்கள்.

இன்றய ஈழப்பிரச்சினை

இன்றய ஈழப்பிரச்சினையின் கவனம் தேர்தல் உத்தி பிரிவதாகவே உள்ளது. சரியாகச்செய்யவேண்டும் என்றால் இனி தமிழ்நாட்டில் உட்கார்ந்துகொண்டு நீ செய்தாயா நான் செய்தேனா என்று காலம்
ஓட்டாமல் தலைவர்கள் யாவரும் தில்லி சென்று மத்திய அரசை
என்ன செய்யப்போகிறது என்று முடிவாகக்கேட்க வேண்டும்.

அப்பாவித்தமிழர்களைக்காப்பாற்றுவோம் என்று கூறுவதில்
இனி அர்த்தமில்லை.
பேச்சுவார்த்தை நடத்த தமிழகத் தலைவர்கலை போகச்சொல்லும் இந்திய அமைச்சர் அதற்கான வாய்ப்பினைத்
தரும் வழியாக விடுதலைப்புலிகலின் மீதான தடையை நீக்கவேண்டும்.

அதனைச்செய்யாமல் வெறும் பேச்சு என்பது காலம் கடத்தி மனிதப்படுகொலை நடத்துவதுடன் ஒரு இன அழிப்பு வேலைக்குத்
துணை போவதாகவே அமையும்.

ஈழத்தமிழர் துயர் நீக்க எத்தனை அமைப்பு கட்டினாலும், எத்தனை
ஆர்ப்பாட்டங்கள் செய்தலும் எல்லாம் கொலைகாரர்கலுக்கு அவகாசம்
தருவதாகவே முடியும். தடயை நீக்கிப்பார்த்தால் தான் உண்மை நிலவரம் புரியும். கூடிக்கூடிப்பேசும் எல்லாருக்கும் கேட்கிறேன்
வெட்கமாகயில்லையா?
இது உள்நாட்டுப்பிரச்சினைத்தானே? இதைக்கேட்க முடியாமல்
என்ன செய்துவிட முடியும்? குறிப்பாக திரு.பழ.நெடுமாறன் அவர்கள்
சோனியாவை நேரில் வர்ப்புறுத்த வேண்டும். சார்க் நாடுகள் அமைப்பில்
இந்தியா இருப்பதால் அதில் அங்கம் வகிக்கும் நாடுகலுடன் சேர்ந்து
இலங்கைக்கு உதவுகிறது என்று சிலர் சொல்லலாம். அதே சார்க்
அமைப்பின் மக்களாகிய நாம் இன அழிப்பை நிறுத்தச்சொல்லும் போது
இந்தியா தடுக்கவேண்டாமா? தமிழினத்தலைவர்களே என்ன செய்யப்போகிறீர்கள்?

Friday, January 16, 2009

தமிழர் நிலை---

தமிழர் நிலை--- இன்று ஈழத்தமிழர் நிலை எண்ணிப்பார்க்கையில் ஏமாளித்தமிழர் என்று ஆகிவிட்டது.இன்றய தமிழர் தலைவர்கள் குறிப்பாக கலைஞர், வைகோ,
யாவரும் துரோகம் செய்துவிட்டனர். மேனன் இல்ங்கைக்குப் போனது வெரும்
2ஆம் கட்ட உதவி பற்றீப் பேசவேதான் என்று சொல்லியுள்ளது, இந்திய அரசு.
பெரிட...பீடிகைகளைப் போட்டு கலைஞர் ஏமாற்ற்ப்பட்டாரா? அல்லது சுற்றியுள்ளவர்கள் சேர்ந்து அவரை ஏமாற்றுவதை அறிகிறாரா? இல்லை
தமிழ் மக்களை ஏமாற்றுவதாக எண்ணீ இனத்துரோகி என்ற பெயர் பெறப்போகிறாரா ?

Thursday, January 1, 2009

உலகம் உய்ய

உலகம் உய்யவேண்டுமானால்,ஆயுதவியாபாரி அமெரிக்கா ஓயவேண்டும்.
வியட்னாம்,ஈராக்,ஆப்கானிஸ்தான்,இல்ங்கை---எங்கெல்லாம் முடியுமோ
அங்கெல்லாமும்,ஆயுதம் விற்கப்பட வேண்டும். பாக்கிஸ்தானுக்கு விற்று அது இல்ங்கைக்கு போகிற்து. இந்தியாவை மிரட்ட பாக்கிஸ்தானுக்கு உதவுவது. உல்கில் எங்கு எது நடந்தாலும் தான் தலையை நுழைப்பது, என்று
ஆயுதபூதமாக அமெரிக்கா இருப்பது உலகத்தின் அமைதிக்குக் கேடு. என்வே
அமெரிக்கா இரண்டு,மூண்றாக ஆனால்தான் உலகம் அமைதியாகவும்,வளமாகவும் வாழமுடியும். சமாதானம் விரும்பும் நாடுகள் இதில் கவனம் செழுத்தவெண்டும் என்று எண்ணத்தோன்றுகிரது. உலகம்
விழித்துக்கொள்ளவேண்டும்.
--இறை கற்பனை இலான்.