Thursday, December 2, 2010

வாரிசூரிமை தடுப்புச்சட்டம்...2

தவறான வ்ழியில் பணம் சேர்த்து அனுபவிப்பவர்களைப் பார்த்து மற்றவர்களும் ஆயத்தமாகிறார்கள்.நம் மத்தியில் தவறுகள், குற்றங்கள் நடைபெறாமல் எப்படி இருக்கும்? எங்கெங்கோ நடைபெரும் தவருகள் அவரவர் வீட்டு வாசலுக்கும் வராது என்பதற்கு என்ன உத்திரவாதம்? இதற்கு மாற்றே இல்லையா? மாற்று வேண்டாமா? இந்தக்குறபாடுகளை ஓரளவாவது தடுக்க இளைய சமுதாயமே உனக்குப் பொறுப்பில்லையா? அறிவு, ஆற்றல் இல்லையா? இந்த சேற்றிலேயே, புதைம்ண்ணிலேயே ஏன் அமிழ்ந்துப் போகிறாய்? சிந்தனையை மாற்று.இந்த மாற்றத்தை யார் ம்றுப்பார்கள்? இன்று இதனைச்செய்யவேண்டிய நிலையில் இருக்கும் அத்காரிகள் வர்க்கமும், அரசியல்வாதி வர்க்கமும் தான் தடைக்கல்லாய் நிற்கும். ஆனால் இவர்களைச்செய்ய வைக்க வேண்டும் ஆனால்எப்படி?இந்த சுயநலக்கூட்டத்தின் நுகற்சியை சம்மட்டியால் அடிக்க ஏ , இளைய சமுதாயமே , நீ ,நீதான் முன்வரவேண்டும்.ஓர் எண்ண ஓட்டத்தை உறுவாக்குங்கள். ஒவ்வொரு மனிதனும் உழைத்து வாழவேண்டும். எல்லோரும் உழைக்க வாய்ப்பும் தரப்படவெண்டும்.வாழம் காலத்தில் தம் குடும்பத்திற்கு, உற்றார் உறவினக்கு உதவட்டும். அதன் பின் தனது சொத்தினை அசையாச் சொத்தினை தம் சந்ததிக்கு எழுதிவக்கக்கூடாது. அதனை சட்டம் தடுக்க வேண்டும். அப்படி ஒரு சட்டம் கொண்டுவந்தப்பின் இந்த நாட்டின் நிலைமையை சற்று எண்ணிப்பாருங்கள். தன் பிள்ளைக்கு சொத்து களை வைத்து விட்டுப்போக முடியாது என்ற நிலை வந்தால் தவறுகளைச்செய்து சொத்து சேகரிக்க வேண்டும் என்று யார் நினைப்பார்கள்.? தானும், தன் மக்களும் வாழ்க்கைச்சக்கரம் ஓட்டுவதற்கு மட்டுமே ப்ணம், சொத்து சேர்ப்பார்கள் இல்லையா? சரி உழைத்து சம்பாதித்த சொத்தினை என்ன செய்வது என்று எண்ணுகிறீர்கள் அல்லவா? விற்கலாம். வரி செழுத்தியது போக மீதம் உள்ளதை தான் அனுபவிக்கலாம். உற்றார் உறவினற்கு கொடுத்து மகிழ்ந்து வாழலாம். ஆனால் அரசிடம் தரப்படும் பணம் அதிகாரிகளால் ,அரசியல் வாதிகளால் சூரையாடப்படும் என்று அச்சம் உள்ளதா? தேவையில்லை, அவர்களும் தம் சந்ததிக்கு எழுதி வைத்துவிட்டுப்போக முடியாது அல்லவா? ப்ணம் மக்கள் ந்லனுக்குச்செலவிடும் போது அனைவரும் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுவிடும் .அரசு மக்கள் அனைவரின் கல்வி, மருத்துவம் போனற தேவைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.. எனவே வாரிசு சொத்துரிமை தடுப்புச்சட்டம் தேவை என உண்ருங்கள். இதனைச்செய்ய முடியுமா? என்று சிந்த்திக்கிறீகளா? முடியும்,ஏன்முடியாது? இதனை இரண்டு சாதிகள் மட்டுமே தடுக்கும்.ஒன்று அரசு அதிகார வர்க்கம், மற்றொன்று அரசியல் வாதி வர்க்கம். இந்தச்சட்டம் கொண்டுவர வேண்டிய இடத்தில் இருப்பதும் அவர்களே. திண்ணையில் படுத்திருப்பவன் உட்கார மற்றவர்க்கு இடம் கொடுக்க முனகுவான்.அதைவிட கூடுதலாக இவன் குறுக்கே நிற்பான். எனவே இளய சமுதாயமே நீ நீதான் முன்வரவேண்டும். முதலில் இதனை ஒரு கருத்தாக்கமாக் ஆக்குங்கள். விவாதமாக ஆக்குங்கள் குறைகள் வந்தால் திருத்திக்கொள்ளலாம். ஆனால் இதில்தான் வெற்றிகரமான மாற்றம் கிடைக்கும்.மனிதசமூகம் தான் வாழவேண்டுமே என்று கவலைசுமந்து வாழும் நிலை மாறும். இப்போது மதத்தில், மதச்சட்டத்தில் தலையிட்கிறீர்கள் என்று சிலர் கூப்பாடு போடுவர். மனிதம் சிறந்து வாழ மதம் தன்னை மாற்றிக்கொள்ளவேண்டுமே தவிர மனிதன் மதத்திற்காக வாழ்வேண்டியதில்லை, மனிதனுக்கு அனுசனையாகத்தான் மதம் இருக்கவேண்டும் என உணர்த்துவோம். வல்லரசாக வர வேண்டும் என்பார் சிலர். யாருக்கு லாபம்?.மேற்சொன்ன இரு வர்க்கம்தான் மகிழ்ந்து வாழமுடியும். பெரியநாட்டு ப் பெரிய மனிதன் என்று ஒரு சிலர் வெளிநாட்டானின் மாலை,மரியாதைகளைப் பெற்றுக்கொண்டு நாட்டை ஒரு வெள்ளைக்காரனுக்குப் பதிலாக பல வெளிநாட்டானுக்கு விற்பான். ஆனால் நல்லரசாக இருந்தால் எவனையும் நாம் ஒன்றுபட்டு எதிற்களாம். நலாமாக வாழலாம். எனவே உழைக்க நாமும் கொழிக்க அவர்களுமா? . எனவே மாற்றிசிந்தியுங்கள். வாரிசு சொத்துரிமை தடுப்புச் சட்டம் தேவை என பரப்புங்கள். ஒன்று கூடுங்கள். விவாதியுங்கள். செயற்கரிய செய்வார் பெரியர். நீங்கள் பெரியரா? சிரியரா? நீங்களே முடிவு செய்யுங்கள். விவாதப்படுத்துங்கள்.முழங்குங்கள்.உழையுங்கள்.உடனே,உடனே. செயலாக்குங்கள்."நாடு நம்முடையது பொறுப்பும் நம்முடையதே."